இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட காயத்தால் 2 முக்கிய தொடர்களை தவறவிடும் ரிஷப் பண்ட் – வெளியான தகவல்

Rishabh Pant
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் இங்கிலாந்து வீரர் கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் கால் பகுதியில் காயமடைந்தார். அதனால் வலியால் துடித்த அவர் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.

2 முக்கிய தொடர்களை தவறவிடும் ரிஷப் பண்ட் :

பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்கையில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அதன் பின்னரும் இந்திய அணியின் மோசமான சூழல் காரணமாக முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த அவர் உடைந்த காலோடு அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் நான்காவது டெஸ்ட் போட்டியோடு வெளியேறிய அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் நான்காவது போட்டியில் விளையாடியிருந்தார். தற்போது கால் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ள அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் முனைப்போடு ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அடுத்து வரும் ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய தொடர்களை தவறவிடுவார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இப்படி அவர் அடுத்த 2 தொடர்களை தவறவிடுவது இந்திய அணிக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அவருக்கு கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய முழுமையாக ஆறு வாரங்கள் வரை ஆகும் என்பதனால் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரை அவர் தவறவிடுவார். அதுமட்டும் இன்றி அக்டோபர் 2-ஆம் தேதி துவங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரையும் தவறவிட இருக்கிறார்.

இதையும் படிங்க : தற்போதைய கிரிக்கெட் உலகில் கே.எல் ராகுல் தான் இந்த விடயத்தில் பெஸ்ட் – புகழ்ந்து தள்ளிய மொயின் அலி

இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்டிற்கு பதிலாக மாற்று வீரராக விளையாடிய துருவ் ஜுரேல் முதன்மை விக்கெட் கீப்பராக இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement