- Advertisement -
ஐ.பி.எல்

27 கோடிக்கு வாங்கியது மட்டுமில்லால் இந்த ஆண்டு ரிஷப் பண்டிற்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் – விவரம் இதோ

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் வேளையில் எதிர்வரும் 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 21-ஆம் தேதி துவங்கி மே மாதம் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அட்டவணை இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிஷப் பண்டுக்கு கிடைக்கவுள்ள பதவி :

ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. அந்த மெகா ஏலத்தில் 10 அணிகளின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி தங்களது அணிகளை பலப்படுத்தினர்.

- Advertisement -

அந்த வகையில் பல்வேறு வீரர்களின் அணி மாற்றம் நிகழ்ந்துள்ளதால் ஒரு சில நிர்வாகங்கள் தங்களது அணிக்கு புதிய கேப்டன்களையும் நியமித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே சில அணிகளின் கேப்டன் மாற்றம் நிகழ்ந்துள்ள வேளையில் லக்னோ அணியின் கேப்டன் மாற்றம் நிகழவுள்ளதாக தெரிகிறது.

அந்த வகையில் கடந்த 3 ஆண்டுகளாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த கே.எல் ராகுல் தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக இடம் மாறியுள்ளதால் லக்னோ அணியால் ரூபாய் 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி அணிக்காக விளையாடி வந்த ரிஷப் பண்ட் 2021-இல் இருந்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டார். கடந்த ஆண்டு விபத்து காரணமாக ஐபிஎல் தொடரை தவறவிட்ட அவர் இந்த ஆண்டு அந்த அணியில் இருந்து வெளியேறி மெகா ஏலத்தில் கலந்துகொண்டார்.

இதையும் படிங்க : அவரை மாதிரி ஸ்டைல் இருக்கு.. அதான் சுப்மன் கில்லை ரோஹித் செலக்ட் பண்ணிருக்காரு.. ரெய்னா பேட்டி

அதனைத்தொடர்ந்து தனது மதிப்பை சோதிக்க விரும்பிய அவருக்கு லக்னோ அணி 27 கோடி கொடுத்தது மட்டுமின்றி தற்போது கேப்டன் பதவியையும் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -