சஞ்சு சாம்சன், இஷான் கிஷனை விட அவர் தான் தரமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் – முன்னாள் வீரர் கருத்து

Rishabh Pant Sanju Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு இடத்துக்கு நிறைய வீரர்கள் போட்டி போடுவது வழக்கமான ஒன்றாகும். குறிப்பாக மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்ததுடன் அதிரடியாக பேட்டிங் செய்து நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை மாற்றி விட்டு சென்றார். அதனால் அவரைப் பார்த்து நிறைய இளம் வீரர்கள் விக்கெட் கீப்பராக வரவேண்டும் என்று லட்சியத்துடன் விளையாடி வருவதால் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்துக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

Rishabh Pant

- Advertisement -

அதில் சஞ்சு சாம்சன், இஷான் கிசான், கேஎல் ராகுல் ஆகிய இளம் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த வீரர்களிடையே போட்டி இருந்தாலும் ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் இந்திய கிரிக்கெட்டில் தனித்துவமான முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஏனெனில் கடந்த 2017இல் அறிமுகமான அவர் கிரிக்கெட்டின் உயிர்நாடியாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக தோனியையும் மிஞ்சிய சாதனை படைத்து “காபா” போன்ற சில சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த வீரராக நிரூபித்துள்ளார்.

தரமான பண்ட்:
இருப்பினும் இதுவரை வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதித்து காட்டியுள்ளார் என்பதற்காகவே சுமாராக செயல்பட்டாலும் 3 வகையான இந்திய அணியிலும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராக உருவாக்குவதற்காக கேப்டன், தேர்வுக்குழு, அணி நிர்வாகம், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதே போல் ஆரம்ப காலத்தில் சச்சின் டெண்டுல்கரும் தடுமாறியுள்ளார் என்ற கருத்துடன் நிறைய முன்னாள் வீரர்கள் அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கின்றனர்.

Karim

அந்த வரிசையில் சஞ்சு சாம்சன், இஷான் கிசான் ஆகியோரைவிட இந்திய கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் தான் தரமான முதன்மை துருப்புச்சீட்டு விக்கெட் கீப்பர் என்று முன்னாள் இந்திய வீரர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் சபா கரீம் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட்டை நான் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிசான் ஆகியோருக்கு மேலே வைப்பேன். ஏனெனில் ரிஷப் பண்ட்டை விட இந்த இருவரையும் நான் துருப்பு சீட்டு வீரர்களாக பார்க்கவில்லை. அதேசமயம் சஞ்சு சாம்சன் அற்புதமான அதிரடி வீரர் என்பதால் தன்னுடைய அணியில் ஒரு பேட்ஸ்மேனாக தன்னுடைய இடத்தை பிடிப்பார்”

- Advertisement -

“மறுபுறம் இஷான் கிசான் இதுவரை தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை பொன்னாக்கும் அளவுக்கு பயன்படுத்தவில்லை. அதனாலேயே இந்திய அணியில் இதுவரை நிலையான இடத்தை பிடிக்க அவர் தடுமாறுகிறார். அதன் காரணமாக வெள்ளைப் பந்து அல்லது சிவப்புப் பந்து என எதுவாக இருந்தாலும் ரிஷப் பண்ட் தான் என்னுடைய முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக இருப்பார். இப்போதெல்லாம் தேர்வுக்குழுவினர் இவர்களை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக பார்க்காமல் முழு பேட்ஸ்மேன்களாக மட்டுமே பார்க்கின்றனர். விக்கெட் கீப்பிங்க்கை வெறும் போனசாக மட்டும் பார்க்கிறார்கள்” என்று கூறினார்.

Karim

அதே சமயம் ஆரம்ப காலங்களை விட இப்போது சஞ்சு சாம்சன் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக பாராட்டும் சபா கரீம் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவே வந்துள்ளார், விக்கெட் கீப்பராக வரவில்லை. சமீப காலங்களில் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்படுவதை நாம் பார்க்கிறோம். ஆரம்ப காலங்களில் தடுமாறிய அவர் தற்போது தொடர்ச்சியாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்”

“இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பின் அவரது ஆட்டத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் காணப்படுகிறது” என்று கூறினார். ஐபிஎல் 2022 தொடரில் 458 ரன்கள் குவித்து அதன்பின் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடர்களில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய சஞ்சு சாம்சன் சமீபத்தில் நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணியின் கேப்டனாக 3 – 0 (3) என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்து சீனியர் அணியில் தன்னுடைய இடத்தை வலுப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement