IND vs RSA : 2 நாள் டைம் இருக்கு, அதுக்குள்ள நீங்க தயாரா இருங்க – பண்ட் மீது ஜாம்பவான் கடும் கோபம்

pant
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் டெல்லி மற்றும் கட்டாக் நகரில் நடந்த முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த இந்தியா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஜூன் 14-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் வென்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற வாழ்வா – சாவா நிலைமையில் களமிறங்கியது. இரவு 7 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 179/5 ரன்கள் குவித்தது.

toss

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 57 (35) இஷான் கிசான் 54 (35) என அதிரடியான ரன்கள் எடுத்து 97 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இறுதியில் ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரியுடன் 31* (21) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக பிரெடோரியஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்தியா வெற்றி:
அதை தொடர்ந்து 180 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவை இந்த முறை பொறுப்புடனும் அற்புதமாகவும் பந்துவீசிய இந்திய பவுலர்கள் ஆரம்பம் முதலே சீரான விக்கெட்டுகளை எடுத்து சவாலை கொடுத்தனர். அதற்கு பதில் சொல்ல முடியாத கேப்டன் பவுமா 8 (10), ஹென்றிக்ஸ் 23 (20) , பிரிட்டோரியஸ் 20 (16) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பவர்ப்ளே ஓவர்களுக்குள் அவுட்டானார்கள். அத்துடன் வேன் டெர் டுஷன் 1 (5), க்ளாஸென் 29 (24), மில்லர் 3 (5) என கடந்த போட்டிகளில் தோல்வியை பரிசளித்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் காலி செய்த இந்தியா 19.1 ஓவரில் 131 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், சஹால் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதனால் இந்த முக்கிய போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா இன்னும் 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ளது. தற்போது நிலைமையில் அடுத்த 2 போட்டிகளில் வென்றால் தான் சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலைமையில் இந்தியா உள்ளது.

- Advertisement -

சுமார் பண்ட்:
முன்னதாக இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுப்பதால் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வரும் ரிசப் பண்ட் அடுத்தடுத்த தோல்விகளால் கடும் நெருக்கடியில் இருந்த நிலையில் நேற்றைய போட்டியில் வென்றதால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். ஆனால் ஒரு பேட்ஸ்மேனாக நேற்றைய போட்டியில் வெறும் 6 ரன்களில் அவுட்டான அவர் இந்த தொடரில் இதுவரை தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பெரிய இன்னிங்ஸ் விளையாடாமல் பின்னடைவை கொடுத்து வருகிறார்.

IND vs RSA Chahal Axar Patel

அதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அடுத்த 2 நாட்களுக்குள் பேட்டிங்கை எப்படி முன்னேற்றலாம் என்று உட்கார்ந்து யோசித்து இந்தியாவை வெற்றி பெற வைக்குமாறு கோபத்துடன் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் களமிறங்கியதும் பவுண்டரி மற்றும் சிக்சர்களை பறக்கவிடுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கடந்த 3 – 4 வருடங்களாக அந்த அளவுக்கு அபாரமாக செயல்பட்ட அவர் இப்போது இப்படி சுமாராக செயல்படுவதுதான் அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஆனால் அவர் தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்”

- Advertisement -

“சில நேரங்களில் கேப்டன்ஷிப் அம்சத்தில் கவனம் செலுத்துவதால் சொந்த ஆட்டத்தைப் பற்றி கேப்டனாக இருப்பவர்கள் அதிகம் சிந்திப்பது கிடையாது. எனவே உங்களுக்கு சொந்த பேட்டிங்கில் சில நுணுக்கங்கள் ரீதியான சிக்கல் இருக்கலாம் என்பதை மறந்து விடுகிறீர்கள். அதை உட்கார்ந்து யோசித்து சரிசெய்ய அவருக்கு 2 நாட்கள் அவகாசம் உள்ளது. தற்போது இந்தியா வென்றுள்ளதால் அவருக்கு கொஞ்சம் அழுத்தமும் குறைந்திருக்கும். அதனால் சற்று நிம்மதியடைந்துள்ள அவர் தனது பேட்டிங்கை பற்றி சிந்திக்க வேண்டும்” என்று கூறினார்.

Gavaskar-1

பொதுவாக ரிஷப் பண்ட் அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய திறமை கொண்டவர். ஆனால் தவறான நேரத்தில் குருட்டுத்தனமாக தவறான ஷாட்டை அடிப்பது தான் அவருக்கு பின்னடைவை கொடுத்து வருகிறது. அது பற்றி சுனில் கவாஸ்கர் மேலும் பேசியது பின்வருமாறு. “அதிரடியாக அடிக்கும்போது அவுட்டாகிறோம். பந்து என்னுடைய இடத்திற்கு வரவில்லை. அதற்காக அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் திசையில் நகர்ந்த போதிலும் என்னால் அடிக்க முடியவில்லை. அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அவர் சிந்திக்க வேண்டும்”

இதையும் படிங்க : டி20 இன்னிங்ஸ் ஆடிய பேர்ஸ்டோ மெகா சாதனை ! ரசிகர்களுக்கு விருந்து படைத்த டெஸ்ட் போட்டியின் – 2 புதிய உலகசாதனை

“அதற்காக தற்போது அதில் முன்னேறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? ஆன் சைடில் அடிக்கலாமா? பவர் மற்றும் டைமிங் கொடுக்கலாமா? நேராக அல்லது எக்ஸ்ட்ரா கவர் மீது அடிக்கலாமா என்று யோசிக்கும் போதுதான் எட்ஜ் வாங்கி அவுட்டாகி விடுவீர்கள். எனவே பதற்றம் அடையாமல் பந்தை நேராக அடித்தால் சிக்ஸர்கள் தாமாக வரும்” என்று ஆலோசனை வழங்கினார்.

Advertisement