டி20 இன்னிங்ஸ் ஆடிய பேர்ஸ்டோ மெகா சாதனை ! ரசிகர்களுக்கு விருந்து படைத்த டெஸ்ட் போட்டியின் – 2 புதிய உலகசாதனை

Jonny Bairstow Ben STokes
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 1 – 0* என தொடரில் முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2-வது போட்டி ஜூன் 10-ஆம் தேதி டிரென்ட் பிரிட்ஜ் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அபாரமாக பேட்டிங் செய்து 553 ரன்கள் குவித்தது.

ENg vs NZ Kane Williamson Ben Stokes

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக மிடில் ஆர்டரில் அற்புதமாக பேட்டிங் செய்த டார்ல் மிட்சேல் இரட்டை சதத்தை நழுவ விட்டாலும் 190 ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் பேட்டிங் செய்த டாம் ப்ளன்டல் தனது பங்கிற்கு சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தும் கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அற்புதமாக பேட்டிங் செய்து தனது முதல் இன்னிங்ஸ்சில் 539 ரன்கள் குவித்தது.

ட்ராவை நோக்கி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓலி போப் சதமடித்து 146 ரன்கள் குவிக்க அவரை விட மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 26 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 176 ரன்கள் குவித்து அசத்தினார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 14 ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்தை அதன் 2-வது இன்னிங்சில் பெரிய ரன்களை எடுக்க விடாமல் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து 284 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தது. அந்த அணிக்கு வில் எங் 56, டேவோன் கான்வே 52 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுத்தனர். மிடில் ஆர்டரில் டார்ல் மிட்சேல் மீண்டும் சிம்ம சொப்பனமாக 62* ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் நின்ற போதிலும் எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

Ben Stokes ENG vs NZ

இப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு 299 ரன்கள் தேவை என்ற இலக்கு நான்கரை நாட்களின் முடிவில் தான் தெரிந்ததால் இப்போட்டி டிராவில் முடிவடையும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். போதாகுறைக்கு ஜாலி கிராவ்லி 0, ஜோ ரூட் 3, ஓலி போப் 18, லீஸ் 44 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி இங்கிலாந்துக்கு பின்னடைவை கொடுத்தனர். அதனால் 93/4 என திணறிய இங்கிலாந்து தோல்வியின் பிடியில் சிக்கினாலும் அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஆரம்பத்தில் நிதானமாக பேட்டிங் செய்து நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தினார்.

- Advertisement -

டி20 இன்னிங்ஸ்:
அதனால் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கிய இங்கிலாந்துக்கு தேநீர் இடைவேளைக்குப் பின் அதாவது கடைசி 30 ஓவர்களில் 160 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தேனீரை குடித்துவிட்டு சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தெம்பாக களமிறங்கி சொல்லி அடித்த ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக பவுண்டரிகளை பறக்கவிட்டு டெஸ்ட் போட்டியில் டி20 இன்னிங்ஸ் விளையாடினார். 5-வது விக்கெட்டுக்கு 179 ரன்கள் சூப்பர் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி வெற்றியை உறுதி செய்த போது 14 பவுண்டரி 8 சிக்சருடன் 136 (92) ரன்களை 147.83 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஜானி பேர்ஸ்டோ கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

Darll Mitchell ENG vs NZ Tom Blundell Motty Potts

இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தலாக பேட்டிங் செய்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 10 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 75* (70) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அதனால் 299/5 ரன்களை எடுத்த இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0* என்ற கணக்கில் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை தோற்கடித்து கோப்பையை முன்கூட்டியே கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

உலகசாதனை:
இப்போட்டியில் டி20 இன்னிங்ஸ் விளையாடி வெறும் 77 பந்துகளில் சதமடித்த ஜானி பேர்ஸ்டோ டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சூப்பர் சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. கில்பர்ட் ஜெசோப் : 76, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக, 1902
2. ஜானி பேர்ஸ்டோ : 77, நியூசிலாந்துக்கு எதிராக, 2022*
3. பென் ஸ்டோக்ஸ் : 85, நியூசிலாந்துக்கு எதிராக, 2015
4. இயன் போத்தம் : 86, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக, 1981

Jonny Bairstow ENg vs NZ

அதைவிட இப்போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து ஆகிய 2 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து மொத்தம் 226 பவுண்டரிகள் மற்றும் 24 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட போட்டியாக இந்த நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி புதிய உலக சாதனை படைத்தது. அந்த பட்டியல் இதோ:
1. 249 பவுண்டரிகள், இப்போட்டி, நாட்டிங்காம்,2022*
2. 242 பவுண்டரிகள், ஆஸ்திரேலியா – இந்தியா, சிட்னி, 2004
3. 230 பவுண்டரிகள், தென்ஆப்ரிக்கா – வெஸ்ட் இண்டீஸ், கேப் டவுன், 2004

இதையும் படிங்க : IND vs RSA : முதல் வெற்றியால் கேப்டன் ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு ! ஆனால் பேட்ஸ்மேனாக தரை மட்டமான சாதனை

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த போட்டியாகவும் இந்த போட்டி உலக சாதனை படைத்தது. அந்த பட்டியல் இதோ:
1. 1675 ரன்கள், இங்கிலாந்து – நியூசிலாந்து, நாட்டிங்கம், 2022*
2. 1447 ரன்கள், இந்தியா – தென் ஆப்பிரிக்கா, விசாகப்பட்டினம், 2019

Advertisement