IND vs RSA : முதல் வெற்றியால் கேப்டன் ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு ! ஆனால் பேட்ஸ்மேனாக தரை மட்டமான சாதனை

IND vs RSA Chahal Axar Patel
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டெல்லி மற்றும் கட்டாக் நகரில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இந்தியா நிர்ணயித்த இலக்கை அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா சொந்த மண்ணில் அடுத்தடுத்த தோல்விகளை பதிவு செய்து ஆரம்பத்திலேயே தொடரில் 2 – 0* என முன்னிலை பெற்றது. அதனால் இந்த தொடரின் கோப்பையை வெல்ல வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா – சாவா நிலைமையுடன் ஜூன் 14-ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா சந்தித்தது.

- Advertisement -

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து 179/5 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் கைக்வாட் – இஷான் கிசான் பவர்பிளே கடந்தும் 10 ஓவர்கள் வரை தென் ஆப்பிரிக்காவை வெளுத்து வாங்கி அபாரமாக பேட்டிங் செய்து 97 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

இந்தியா அபாரம்:
அதில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 57 (35) ரன்கள் எடுத்த ருத்ராஜ் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 14 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அந்த சமயத்தில் 5 பவுண்டரி 2 சிக்சருடன் சிறப்பாக பேட்டிங் செய்த இஷான் கிசனும் 54 (35) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய 2 முக்கிய பேட்ஸ்மேன்கள் தலா 6 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சிக் கொடுத்தனர். அதனால் 200 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட இந்தியாவிற்கு இறுதியில் ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரியுடன் 31* (21) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.

IND vs RSA Harshal Patel

அதை தொடர்ந்து 180 என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவை இம்முறை இந்திய பவுலர்கள் பொறுப்புடனும் தரமாகவும் பந்துவீசி ஆரம்பம் முதலே மடக்கிப் பிடித்தனர். அதற்கு ஈடுகொடுக்க முடியாத அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் முதலில் கேப்டன் தெம்பா பாவமா 8 (10) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த ஹென்றிக்ஸ் 23 (20) ரன்களிலும் பிரிட்டோரியஸ் 20 (16) ரன்களிலும் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதோடு ஓயாத இந்திய பவுலர்கள் அடுத்து வந்த வேன் டெர் டுஷன் 1 (4) ஹென்றிச் க்ளாஸென் 29 (24) டேவிட் மில்லர் 3 (5) என கடந்த போட்டிகளில் தோல்வியை பரிசளித்த முக்கிய பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் சீரான இடைவெளிகளில் அவுட் செய்து மிடில் ஆர்டரை காலி செய்தனர்.

- Advertisement -

பண்ட் நிம்மதி:
இறுதியில் வேன் பர்ணல் 22* (18) எடுத்தாலும் எதிர்ப்புறம் அந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டானதால் 19.1 ஓவரிலேயே 131 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும் சஹால் 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். அதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா வாழ்வா சாவா போட்டியில் வாழ்வைக் கண்டு 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இன்னும் 2 – 1* என பின்தங்கியுள்ளது. இந்த தொடரை வெல்ல அடுத்த 2 போட்டிகளில் இந்தியா வென்றாக கட்டாயத்தில் உள்ளது.

Pant

முன்னதாக இந்த தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் நிலையில் கேஎல் ராகுல் காயத்தால் விலகியதால் திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் முதல் 2 போட்டிகளில் சுமாராக கேப்டன்ஷிப் செய்து முதல் 2 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனை படைத்தார். மேலும் பவுலர்களை சரியாக உபயோகப்படுத்தாமல் முன்னாள் வீரர்களின் கடுமையாக விமர்சனங்களை வாங்கிக்கொண்ட அவர் 2 தொடர் தோல்விகளுக்கு பின் இப்போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்து கேப்டனாக  நிம்மதி அடைந்துள்ளார்.

- Advertisement -

தரைமட்ட சாதனை:
இருப்பினும் நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் வெறும் 6 ரன்களில் அவுட்டான அவர் மீண்டும் பொறுப்பற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதைவிட நேற்றைய போட்டியுடன் சேர்த்து இந்திய மண்ணில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற படுமோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

dhoni with pant

1. அவர் இதுவரை இந்திய மண்ணில் களமிறங்கிய 20 சர்வதேச டி20 இன்னிங்ஸ்களில் 7* முறை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியுள்ளார்.

இதையும் படிங்க : டெஸ்டில் இப்படி ஒரு ஆட்டமா? சாம்பியன் நியூஸிலாந்தை சாய்த்த இங்கிலாந்து மாஸ் வெற்றி – ரசிகர்கள் வியப்பு

2. ஆனால் வரலாற்றில் இதுவரை விக்கெட் கீப்பர்களாக விளையாடிய எம்எஸ் தோனி, தினேஷ் கார்த்திக் போன்ற இதர அனைவரும் சேர்ந்து 38 இன்னிங்சில் வெறும் 6 முறை மட்டுமே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகியுள்ளனர். இதிலிருந்து ரிஷப் இந்தியாவுக்காக எந்த அளவுக்கு அதுவும் சொந்த மண்ணில் தரை மட்ட அளவில் சுமாராக செயல்படுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

Advertisement