ஐபிஎல் 2024 : ரிஷப் பண்ட்டுக்கு என்சிஏ காட்டிய பச்சைக்கொடி.. கேப்டன், கீப்பராக விளையாடுவாரா? வெளியான தகவல்

Rishabh Pant DC
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தேதி முதல் கோலாகலமாக துவங்க உள்ளது. இம்முறை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. முன்னதாக இந்த தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது.

ஏனெனில் 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் அதற்காக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். அதன் காரணமாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை ஆகிய 3 முக்கியமான தொடர்களில் அவர் விளையாடவில்லை. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அவர் விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது.

- Advertisement -

என்சிஏ பச்சைக்கொடி:
இருப்பினும் அதிர்ஷ்டத்துடன் உயிர் தப்பிய அவர் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் குணமடைந்து வந்தார். அந்த வரிசையில் சமீபத்தில் அவர் பேட்டிங் பயிற்சிகளை செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனாலும் 2024 தொடருக்காக அறிவிக்கப்பட்ட முதற்கட்ட டெல்லி அணியில் அவருடைய பெயர் இடம் பெறவில்லை.

அதன் காரணமாக இம்முறையும் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடல் தகுதி சான்றிதழை ரிஷப் பண்ட்டுக்கு என்சிஏ வாங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதாவது மீண்டும் விளையாடுவதற்கு ரிசப் பண்ட் ஃபிட்டாக இருப்பதாக என்சிஏ அறிவித்துள்ளது. அதனால் 2024 ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

ஆனால் குணமடைந்த பின் இதுவரை ரிஷப் பண்ட் எந்த உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி ஃபிட்னெஸை காட்டவில்லை. எனவே நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்கும் அவர் டெல்லி அணிக்காக வழக்கம் போல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முழுமையாக விளையாட மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பந்துக்கும் குனிந்து அமர்ந்து எழுந்திருக்க வேண்டிய விக்கெட் கீப்பர் வேலையை கண்டிப்பாக ரிசப் பண்ட் செய்ய மாட்டார் என்று தெரிய வருகிறது.

இதையும் படிங்க: சிஎஸ்கே கோட்டையான சேப்பாக்கத்தில் விராட் கோலி ஆட்டம் எடுபடல.. இதை செய்யலன்னா ஆர்சிபி ஜெயிக்காது.. ஹர்பஜன் கருத்து

அதனால் பழைய நிலையை எட்டும் வரை அவர் பேட்ஸ்மேனாக மட்டுமே அதுவும் இம்பேக்ட் வீரராக ஏதேனும் ஒரு இன்னிங்ஸில் மட்டும் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக இம்முறையும் டேவிட் வார்னர் டெல்லியின் கேப்டனாக செயல்படுவார் என்று நம்புகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் டெல்லி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement