IND vs ENG : உலகின் எல்லா இடங்களிலும் அடிக்கிறார், வருங்கால சூப்பர் ஸ்டாராக வருவார் – ரிஷப் பண்ட்டை பாராட்டும் 2 ஜாம்பவான்கள்

Rishabh Pant 125
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா 2014க்குப்பின் அங்கு கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றதால் வெற்றியை தீர்மானிக்க மான்செஸ்டரில் ஜூலை 17இல் நடைபெற்ற 3-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இந்தியாவின் தரமான பந்துவீச்சில் 45.5 ஓவரில் ஆல்-அவுட்டாகி 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்ற ஜேசன் ராய் 41, பென் ஸ்டோக்ஸ் 27, மொய்ன் அலி 34, லிவிங்ஸ்டன் 27 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 60 (80) ரன்கள் குவித்தார்.

Rishabh Pant Hardik Pandya

- Advertisement -

இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்களும் சஹால் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 1, ரோகித் சர்மா 17 என தொடக்க வீரர்கள் அவுட்டாகி ஏமாற்றினர். அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் வழக்கம்போல 17 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 16 ரன்களில் நடையை கட்டினார்.

மாஸ் காட்டிய பண்ட்:
அதனால் 72/4 என சறுக்கிய இந்தியாவுக்கு தோல்வி உறுதியென ரசிகர்கள் கவலையடைந்த போது ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் – ஹர்டிக் பாண்டியா ஆகியோர் 5-வது விக்கெட்டுக்கு பொறுப்பாகவும் அதிரடியாகவும் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து செங்குத்தாக தூக்கி நிறுத்தினர். அதில் 10 பவுண்டரியுடன் 71 (55) ரன்களில் வெற்றி உறுதி செய்து பாண்டியா ஆட்டமிழந்தாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட் 16 பவுண்டரி 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து 125* (113) ரன்கள் குவித்து அபார பினிஷிங் கொடுத்தார். அதனால் 42.1 ஓவரில் 261/5 ரன்கள் எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பெற்று இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை முத்தமிட்டது.

Rishabh Pant 1

முன்னதாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக 2018இல் அறிமுகமாகி விளையாடி வரும் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரவெடியாக பேட்டிங் செய்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்து காபா போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் பர்மிங்காமில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் கூட 145 (111) வெளுத்து வாங்கிய அவர் அதிரடி காட்ட வேண்டிய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இதுநாள் வரை எப்போதும் மனதில் நிற்கும் அளவுக்கு அபாரமாக செயல்பட்டதில்லை.

- Advertisement -

வருங்கால சூப்பர்ஸ்டார்:
அதனால் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற வகையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த அவர் தற்போது வலுவான இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதல் சதத்தை அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தம்மாலும் வெள்ளைப் பந்து போட்டிகளில் அசத்த முடியும் என்று நிரூபித்துள்ளார்.

hussain

இந்நிலையில் பொதுவாக சொந்த மண்ணை தவிர வெளிநாடுகளில் பெரும்பாலான வீரர்கள் தடுமாறுவார்கள் ஆனால் பிரிஸ்பேன், பர்மிங்காம், மான்செஸ்டர் என உலகின் அனைத்து இடங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படும் திறமை பெற்றுள்ள ரிஷப் பண்ட் இந்தியாவின் வருங்கால சூப்பர் ஸ்டாராக வருவார் என்று இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் பாராட்டியுள்ளார். இது பற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நிறைய வீரர்கள் எங்களால் உலகின் அனைத்து காலச் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு உட்படுத்திக்கொள்ள முடியாது என்று கூறுவார்கள். ஆனால் உங்களிடம் அனைத்து சூழ்நிலைகளிலும் கச்சிதமாக செயல்படக்கூடியவர் உள்ளார். பிரிஸ்பேன் அல்லது பர்மிங்காம் அல்லது இங்கே என சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அவர் அதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு உட்படுத்திக் கொள்கிறார். அவர் (பண்ட்) வருங்காலங்களில் இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கப் போகிறார்” என்று கூறினார்.

Shastri

மேலும் ரிஷப் பண்ட் ஒரு ஸ்பெஷல் ப்ளேயர் என முன்னாள் இந்திய பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரவிசாஸ்திரி பாராட்டியுள்ளார். இது பற்றி இதே தொடரில் வர்ணனையாளராக செயல்படும் அவர் பேசியது பின்வருமாறு. “உலக அளவில் மிகச் சிறந்தவரான அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ரசிகர்களை மகிழ்விக்க கூடியவராக உள்ளார்”

இதையும் படிங்க: IND vs ENG : கேப்டன்ஷிப் ஓகே ஆனால் அன்றும் இன்றும் முக்கிய போட்டியில் மாறாமல் தொடரும் ரோஹித் சர்மாவின் சொதப்பல்கள்

“இந்தியா தடுமாறிய போது ஸ்பெஷலான சதமடித்த அவர் ஸ்பெஷலான வீரர். முந்தைய காலகட்டங்களில் அதிரடியாக ரன்களை சேர்த்த அவர் தற்போது ஆரம்பத்தில் சிங்கிள் போன்ற ரன்களை எடுத்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்னர் அதிரடி காட்டுகிறார். அந்த வகையில் அவரின் முதிர்ச்சியும் முன்னேறியுள்ளது” என்று கூறினார்.

Advertisement