டி20 உலககோப்பை : மேலும் ஒரு ஸ்டார் பேட்டருக்கு காயமா? – புகைப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம்

IND vs SA Rishabh Pant Quiton De Kock Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் பவர்பிளே ஸ்பெசலிஸ்ட் தீபக் சாகர் ஆகியோர் காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகினர்.

- Advertisement -

அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு தற்போது இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் பயிற்சி போட்டிகளில் பங்கேற்று விளையாட வருகின்றனர். இன்னும் சில தினங்களில் சூப்பர் 12 சுற்று ஆரம்பிக்க உள்ள நிலையில் தற்போது இந்திய அணி மும்முரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு இந்திய வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளதோ என்கிற வகையில் ஒரு புகைப்படமானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி போட்டியில் பங்கேற்று விளையாடியது.

Rishabh-Pant

இந்த போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இருந்த வேளையில் இந்த ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் களமிறங்கவில்லை மேலும் வீரர்களின் ஓய்வு அறையில் காணப்பட்ட அவர் காலில் பெரிய கட்டு ஒன்றினை போட்டு அதில் ஐஸ் பேக் வைத்திருந்தார்.

- Advertisement -

இப்படி ரிஷப் பண்ட் காயம் குறித்து வெளியான புகைப்படமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பயிற்சி போட்டியில் களமிறங்கும் வீரர்களின் திறனை வைத்தே பிளேயிங் லெவனில் இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரிஷப் பண்ட் பயிற்சி போட்டியில் விளையாடாதது அவரது இடத்தினை தற்போது மேலும் சந்தேகமாக்கி உள்ளது.

இதையும் படிங்க : டி20 உ.கோ வரலாற்றில் அதிகவேகமாக அரை சதமடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியல்

மேலும் வலைப்பயிற்சியின்போது அவருக்கு காயம் ஏற்பட்டதா? அல்லது அந்த காயத்தின் தன்மை மற்றும் தீவிரம் என்ன? என்பது குறித்து பிசிசிஐ அல்லது அணியின் நிர்வாகமோ தெளிவான தகவலை வெளியிட்டால் மட்டுமே இந்த பிரச்சனை குறித்த தீர்வு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement