அடுத்த போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பில்லை.. கேப்டனாக மாறிய நிக்கோலஸ் பூரான் – என்ன நடந்தது?

Rishabh Pant
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியானது பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜப் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதினை. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

வெளியேறிய ரிஷப் பண்ட்.. கேப்டனான நிக்கோலஸ் பூரான் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணி பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 146 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 40 ரன்களையும், முகுல் சவுத்ரி 39 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ராஷிக் சலாம் தார் 4 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் போது லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் வீசிய பந்தில் காயமடைந்து போட்டியின் பாதியிலேயே வலியுடன் கிட்டத்தட்ட அழுதவாறு வெளியேறினார்.

பின்னர் மீண்டும் பேட்டிங் செய்வாரா? என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் இறுதி நேரத்தில் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் ஒரு ரன் மட்டுமே எடுத்து நிலையில் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். முழங்கையில் பலமாக பந்து தாக்கியதால் கிரிப் போட்டுக் கொண்டு வந்து விளையாடிய அவர் விக்கெட்டை இழந்தார். பின்னர் இரண்டாம் பாதியில் லக்னோ அணி பீல்டிங் செய்ய வரும்போது அவர் விக்கெட் கீப்பராக வரவில்லை. அவருக்கு பதிலாக முகுல் சவுத்ரி விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல் முறையாக விராட் கோலி இன்று எடுத்த முடிவு – விவரம் இதோ

இதன் காரணமாக இரண்டாம் பாதியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக நிக்கோலஸ் பூரான் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த போட்டியில் காயம் காரணமாக பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய வரும்போது அசவுகரியத்தை சந்தித்தால் நிச்சயம் அடுத்த போட்டியை தவற விடுவார் என்றும் அடுத்த போட்டியிலும் நிக்கோலஸ் பூரான் கேப்டனாக தொடர அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement