- Advertisement -
இந்திய கிரிக்கெட்

252 ரன்ஸ்.. 70 பாய்ண்ட்ஸ்.. தோனியை அசால்ட்டாக முந்திய ரிஷப் பண்ட் 61 வருட சாதனை.. சத்தமின்றி புதிய வரலாறு

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் பேட்டிங்கில் இந்தியா நன்றாக ஃபினிஷிங் செய்யத் தவறியது தோல்விக்கு முதன்மை காரணமாக அமைந்தது. அதே போல 7 கேட்ச்களை தவற விட்டதும் வெற்றியை இங்கிலாந்துக்கு பரிசளித்தது.

முன்னதாக அப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட் மிகச் சிறப்பாக விளையாடி 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்தார். முதல் இன்னிங்சில் 134 ரன்களை அடித்த அவர் 2வது இன்னிங்சில் 118 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு அற்புதமாக போராடினார். அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்ததை அனைவரும் அறிவோம்.

- Advertisement -

61 வருட சாதனை:

இந்நிலையில் அந்தப் போட்டியில் மொத்தமாக ரிஷப் பண்ட் 252 ரன்களை அடித்துள்ளார். அதன் வாயிலாக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையை ரிஷப் பண்ட் சத்தமின்றி படைத்துள்ளார். இதற்கு முன் 1964ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய கீப்பர் புத்தி குந்தேரன் 230 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.

அந்தப் பட்டியலில் 2013ஆம் ஆண்டு சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 224 ரன்கள் குவித்த தோனி 3வது இடத்தில் தான் இருக்கிறார். அந்த வகையில் இந்த சாதனை பட்டியலிலும் தோனியை அவர் அசால்டாக முந்தியுள்ளார் என்றே சொல்லலாம். இப்படி ஒரே போட்டியில் 2 சதங்கள் அடித்த காரணத்தால் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ரிசப் பண்ட் 801 ரேட்டிங் புள்ளிகளுடன் 7வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.

- Advertisement -

800 ரேட்டிங் புள்ளிகள்:

இந்தப் போட்டிக்கு முன் 739 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்த அவர் இரட்டை சதத்தை அடித்த காரணத்தால் 70 புள்ளிகளைப் பெற்று 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் வாயிலாக ஐசிசி டெஸ்ட் தரவரிசை பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 800 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற வரலாற்றையும் ரிசப் பண்ட் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: 180க்கு ஆல் அவுட்.. வெ.இ மண்ணில் ஆஸ்திரேலியா பரிதாப சாதனை.. பதிலடி கொடுக்கும் ஆஸி

இதற்கு முன் அதிகபட்சமாக 661 புள்ளிகளைப் பெற்ற தோனி உட்பட வேறு எந்த இந்திய கீப்பரும் 800 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றதில்லை. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் ஜாம்பவானாக எடுத்துள்ளார் என்பதில் சந்தேகமில்லை. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் தேதி துவங்குகிறது.

- Advertisement -