இந்திய வீரரால் 2000 கோடிகளை சம்பாதித்த ஆஸி கிரிக்கெட் வாரியம் – வெளியான அசத்தல் செய்தி

pant-1
- Advertisement -

உலக கிரிக்கெட்டில் ஆடவர் மற்றும் மகளிர் என 2 வகையான பிரிவுகளிலும் எதிரணிகளை வெளுத்து வாங்கி அதிக வெற்றிகளை குவிக்கும் பலமான அணி என்றால் அது ஆஸ்திரேலியாவாகும். சில நாடுகள் ஒரு உலக கோப்பையை வெல்வதற்கே திண்டாடும் நிலையில் காலம் காலமாக தங்களது மிகச் சிறப்பான செயல்பாடுகளால் 5 கோப்பைகளை ஆஸ்திரேலியா அசால்ட்டாக வென்றுள்ளதே அதற்கு எடுத்துக்காட்டாகும். எனவே ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது எந்த ஒரு எதிரணிக்கும் எப்போதும் சவாலான ஒன்றாகும். அதிலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது உண்மையாகவமே மிகவும் கடினமான ஒன்றாகும். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் ஒரு டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அவர்களது நாட்டில் தோற்கடிப்பது சிம்ம சொப்பணமாகும்.

ஏனெனில் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் பிறந்து வளர்ந்து கிரிக்கெட் விளையாடிய இந்திய அணியினர் வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலிய மைதானங்களில் அவர்களது வேகப்பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் தோற்று விடுவார்கள். அதனாலேயே 1947 முதல் வரலாற்றில் பல முறை அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியினர் தோல்வியடைந்து இறுதியில் அங்குள்ள கடற்கரையில் குளியல் போட்டுவிட்டு புகைப்படம் எடுத்துவிட்டு வெறும் கையுடன் திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

- Advertisement -

காபா வெற்றி:
அந்த நிலைமையில் ஆக்ரோசம் நிறைந்த போராடும் அணியாக மாற்றிய விராட் கோலி தலைமையில் கடந்த 2018/19 சீசனில் புஜாரா, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 (4) என்ற கணக்கில் வென்ற இந்தியா 70 வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற வரலாற்றை இந்தியா படைத்தபோது ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவர் இல்லாத பலவீனமான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து விட்டார்கள் என்று அந்நாட்டு ஊடகங்கள் பேசின. அதற்கு பதிலடி கொடுக்க 2020/21 சீசனில் மீண்டும் அங்கு விளையாடிய இந்தியா முதல் போட்டியில் 36 ஆல் அவுட்டாகி வரலாற்று தோல்வியை சந்தித்தபோது கேப்டன் விராட் கோலியும் தாயகம் திரும்பினார்.

- Advertisement -

இருப்பினும் மனம் தளராமல் கேப்டனாக பொறுப்பேற்ற அஜிங்கிய ரஹானே மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதன்பின் 3-வது போட்டியில் 90+ ரன்கள் விளாசி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து சென்ற ரிஷப் பண்ட் ஆட்டமிழந்ததால் இறுதியில் அஷ்வின் – விஹாரி வலியுடன் பார்ட்னர்ஷிப் போட்டு போராடி ட்ரா செய்தனர்.

அதனால் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் பும்ரா, ஷமி, அஷ்வின் உட்பட பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற அனுபவமில்லாத இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா மீண்டும் மிகச் சிறப்பாக செயல்பட்டு 31 வருடங்களாக கோட்டையாகத் திகழ்ந்த பிரிஸ்பேன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அந்த முறை டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் இருந்த ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடிக்க கடைசி இன்னிங்சில் பயமறியாத காளையாக சீறிப்பாய்ந்த ரிஷப் பண்ட் 89* ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

2000 கோடி:
இப்படி அடுத்தடுத்த வரலாற்று வெற்றிகளை பதிவு செய்ததால் ஆஸ்திரேலியாவில் இந்தியா பங்கேற்கும் டெஸ்ட் உட்பட அனைத்து கிரிக்கெட் தொடருக்கான மவுசு தற்போது பலமடங்கு கூடியுள்ளது. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளையும் இந்தியாவில் ஒளிபரப்பும் உரிமையை ஏலத்தின் வாயிலாக டிஸ்னி ஸ்டார் நிறுவனம் 360 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கு வாங்கியுள்ளது.

7 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த உரிமை இந்திய ரூபாயில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கோடிகள் என தெரிய வருகிறது. மேலும் கடந்த முறை “சேனல் 9” நிறுவனம் வழங்கிய தொகையை (275 மில்லியன் டாலர்) விட தற்போதைய தொகை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய வாரியம் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : IND vs WI : 3 ஆவது போட்டிக்கு தடையாக வரும் மழை – போட்டி முழுமையாக நடக்குமா, வெதர் ரிப்போர்ட் இதோ

இதற்கு இந்தியா மற்றும் ரிஷப் பண்ட் விளையாடிய அந்த முக்கியமான காபா இன்னிங்ஸ் தான் காரணம் என்றும் அந்நாட்டு வாரியம் கருதுகிறது. இதுபற்றி பிரபல சிட்னி ஹெரால்ட் பத்திரிக்கையில் வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு. “கடந்த 2021இல் காபா போட்டியில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல உதவிய ரிஷப் பண்ட் ஆட்டம் ஒளிபரப்பு உரிமம் நிர்வாகங்களின் நினைவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement