IND vs WI : 3 ஆவது போட்டிக்கு தடையாக வரும் மழை – போட்டி முழுமையாக நடக்குமா, வெதர் ரிப்போர்ட் இதோ

Queens Park Oval Trinidad Stadium Ground
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா ஜூலை 22இல் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை போராடி வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த நிலையில் ஜூலை 24இல் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 312 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக துரத்திய இந்தியா அக்சர் பட்டேல் அதிரடியில் கடைசி ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

இந்த அடுத்தடுத்த திரில் வெற்றிகளால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா இளம் வீரர்களுடன் வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சாதித்து பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் 12-வது முறையாகத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீசை தோற்கடித்துள்ள இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற உலக சாதனையையும் படைத்துள்ளது. இந்த நிலைமையில் இத்தொடரின் கடைசி சம்பிரதாய போட்டி ஜூலை 27-ஆம் தேதியான நாளை இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு முதல் 2 போட்டிகள் நடந்த அதே குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

- Advertisement -

வைட்வாஷ் செய்யுமா:
இந்த தொடரில் நிக்கோலஸ் பூரன் தலைமையில் ஷாய் ஹோப், கெய்ல் மேயர்ஸ், அல்சாரி ஜோசப் போன்ற நல்ல தரமான வீரர்கள் இருந்த போதிலும் 2 போட்டிகளிலும் 300 ரன்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் கடைசி கட்ட ஓவர்களில் சுமாராக செயல்பட்டதால் நெஞ்சை உடைக்கும் அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்க நேரிட்டது. அதனால் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைகுனிவுக்கு உள்ளாகியுள்ள அந்த அணி இந்த கடைசி போட்டியிலாவது வைட்வாஷ் அவமான தோல்வியை தவிர்ப்பதற்காக முழு மூச்சுடன் வெற்றிக்காக போராட உள்ளது.

மறுபுறம் ஷிகர் தவன் தலைமையில் இளம் வீரர்களுடன் முக்கிய நேரங்களில் கச்சிதமாக செயல்பட்டு அடுத்தடுத்த திரில் வெற்றிகளைப் பெற்ற இந்தியா அதே புத்துணர்ச்சியுடன் கடைசி போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இந்த தொடரின் கோப்பையை வெல்ல போராட உள்ளது.

- Advertisement -

குறுக்கே மழை:
இருப்பினும் இந்த இரு அணிகளின் வெற்றிக்கு குறுக்கே மழை வருவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறது என்றே கூறலாம். ஆம் முதல் 2 போட்டிகள் நடைபெற்ற போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் இருக்கும் குயின்ஸ் பார்க் மைதானத்தில் தான் இந்த 3-வது போட்டியும் நடைபெறுகிறது.

1. அங்கே முதல் போட்டியில் வராத மழை 2-வது போட்டியில் இந்தியா 312 ரன்கள் துரத்தும் போது 10-வது ஓவரில் குறுக்கே வந்து சுமார் 15 நிமிடங்கள் போட்டியை தடுத்து நிறுத்தினாலும் கருணையுடன் உடனடியாக விலகியதால் அப்போட்டி முழுமையாக நடைபெற்றது.

- Advertisement -

2. அந்த நிலைமையில் 3-வது போட்டி நடைபெறும் நாளன்று போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் மதிய நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3. குறிப்பாக உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி துவங்கும் போது 36% என்ற அளவில் இருக்கும் மழைக்கான வாய்ப்பு 42%, 68%, 69%, 70% என மதியம் 1 மணிவரை படிப்படியாக அதிகரித்து இடியுடன் கூடிய மழையாக பெய்ய வாய்ப்புள்ளது.

- Advertisement -

4. அதன்பின் 58%, 51%, 32% என குறையத் துவங்கும் மழை மாலை 5 மணியளவில் முற்றிலும் நிற்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அதற்குள் போட்டி முடிவடையும் நேரமும் வந்துவிடும்.

5. இதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறுவதில் மிகப்பெரிய சிக்கலும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குயின்ஸ் பார்க் மைதானத்தின் பின்புறத்தில் மலைத்தொடர்கள் இருப்பதால் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது போல் மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க : மார்க் மை வேர்ட்ஸ். இந்த இந்திய பவுலர் டி20 உலககோப்பைக்கு ரொம்ப முக்கியம் – டேனிஷ் கனேரியா ஓபன்டாக்

6. இருப்பினும் முடிந்த அளவுக்கு ஓவர்கள் குறைக்கப்பட்டு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றியை தீர்மானிக்க அம்பயர்கள் முயற்சிப்பார்கள். அதையும் தாண்டி கன மழை பெய்தால் இப்போட்டி ரத்து செய்யப்பட்டு ஏற்கனவே இந்தியா தொடரை

Advertisement