மார்க் மை வேர்ட்ஸ். இந்த இந்திய பவுலர் டி20 உலககோப்பைக்கு ரொம்ப முக்கியம் – டேனிஷ் கனேரியா ஓபன்டாக்

Danish-Kaneria
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது லீக் சுற்றிலேயே இந்திய அணி படுதோல்வி அடைந்து வெளியேறியதால் இம்முறை கோப்பையை கைவிடக்கூடாது என்பதனால் பல மாற்றங்களை செய்து தற்போது வலுவான அணியாக கட்டமைத்து வருகிறது. இதன் காரணமாக தற்போது ரோகித் தலைமையிலான இந்திய அணி முழு வீச்சில் தயாராகி வருகிறது.

Team India Jasprit Bumrah

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறலாம் என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா இந்திய டி20 அணியில் இடம்பெற வேண்டிய பவுலர் குறித்து பேசியுள்ளார்.

அந்தவகையில் நிச்சயம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அர்ஷ்தீப் சிங் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அறிமுகமாகி அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்துவார்.

Rohit Sharma Arshdeep Singh

அதோடு அவரிடம் நன்றாக பந்து வீசும் திறன் இயற்கையாகவே உள்ளது. பேட்ஸ்மேன்களின் மனநிலையை பொறுத்து அவர் யோசித்து பந்து வீசுகிறார். அதே போன்று அவர் பந்து வீசும் போது விக்கெட்டுகளும் எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது. எனவே அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணிக்கு ஒரு அற்புதமான தேர்வாக இருப்பார்.

- Advertisement -

அதோடு ஆசியா கோப்பையிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். என்னை பொறுத்தவரை இந்திய அணியின் மிக முக்கியமான பவுலராக வெகு விரைவில் அர்ஷ்தீப் சிங் மாறுவார் என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய நட்சத்திரங்களை தொடர்ந்து திரைப்படமாகும் பாக் ஜாம்பவானின் வாழ்க்கை வரலாறு, கெஸ்ட் ரோலில் ஆஸி ஜாம்பவான்

கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் அந்த தொடர் முழுவதுமே மிக சிக்கனமாக ரன்களை விட்டுக்கொடுத்து அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்கு எதிராக அறிமுகமான அவர் அந்த போட்டியிலும் சிக்கனமாக ரன்களை விட்டுக் கொடுத்து அற்புதம்மாக பந்துவீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement