குட்டிக்கரணம் அடித்து கொண்டாடிய ரிஷப் பண்ட்.. 30 லட்சம் அபராதத்தால் நீடிக்காத மகிழ்ச்சி.. பரிதாப விவரம்

RIshabh Pant 2
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 27ஆம் தேதி 70வது மற்றும் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் லக்னோவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு 9வது வெற்றியைப் பெற்றது. அதனால் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறிய ஆர்சிபி குவாலிஃபயர் 1 போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 228 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இந்த வருடம் முதல் முறையாக அபாரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் சதத்தை அடித்து 118* (61) ரன்கள் குவித்தார். 27 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு வாங்கப்பட்ட அவர் ஆரம்பம் முதலில் மோசமாக விளையாடியதால் கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களை சந்தித்தார்.

- Advertisement -

நீடிக்காத மகிழ்ச்சி:

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி சதத்தை அடித்த ரிஷப் பண்ட் குட்டிக்கரணம் அடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடியது வைரலானது. ஆனால் அந்தக் கொண்டாட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை என்றே சொல்லலாம். ஏனெனில் அடுத்து விளையாடிய பெங்களூரு அணி சுமாராக பவுலிங் செய்த லக்னோ பவுலர்களை அடித்து நொறுக்கி 18.4 ஓவரிலேயே 230/4 ரன்களை அடித்து எளிதாக வென்றது.

அந்த அணிக்கு பில் சால்ட் 30, விராட் கோலி 54, கேப்டன் ஜிதேஷ் ஷர்மா 85* (33), மயங் அகர்வால் 41* (23) ரன்களை அடித்து வெற்றிக்கு உதவினர். மறுபுறம் லக்னோவுக்கு அதிகபட்சமாக வில்லியம் ஓ’ரோர்க்கே 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஆறுதல் வெற்றியைக் கூட பெற முடியவில்லை. இந்நிலையில் அந்தப் போட்டியில் லக்னோ நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

- Advertisement -

30 லட்சம் அபராதம்:

சொல்லப்போனால் இந்த வருடம் ரிஷப் பண்ட் தலைமையில் 3வது முறையாக லக்னோ நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்கவில்லை. அதனால் ஏற்கனவே 12, 24 லட்சங்களை அபராதமாக விதித்திருந்த பிசிசிஐ தற்போது ரிஷப் பண்ட்க்கு 30 லட்சம் போட்டி சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: வினோத நோபால்.. நேர்மைத் தவறாத பண்ட்.. தடை பெற்றும் திருந்தாமல் ஜிதேஷிடம் அடி வாங்கிய திக்வேஷ்

மேலும் இது 3வது முறை என்பதால் லக்னோ அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் தலா 12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. மொத்தத்தில் இந்த வருடம் மோசமாக விளையாடிய ரிஷப் பண்ட்டுக்கு கடைசிப் போட்டியில் அடித்த சதம் மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஆனால் பெங்களூரு அணி வெற்றி பெற்றதாலும் 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாலும் அவருடைய மகிழ்ச்சி நிலைக்கவில்லை என்றால் மிகையாகாது.

Advertisement