90 லட்சம் க்ளோஸ்.. ரிஷப் பண்ட் தலைமையிலான மொத்த டெல்லி அணிக்கும் கொடுக்கப்பட்ட பெரிய தண்டனை

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சுமாராக விளையாடிய டெல்லி 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. விசாகப்பட்டினத்தில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 272/7 ரன்கள் அடித்தது.

அதிகபட்சமாக சுனில் நரேன் 85, ரகுவன்சி 54, ரசல் 41, ரிங்கு சிங் 26 ரன்கள் விளாசி ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக கொல்கத்தாவை சாதனை படைக்க வைத்தனர். டெல்லி சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜே 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 273 ரன்களை துரத்திய டெல்லிக்கு டேவிட் வார்னர், பிரிதிவி ஷா போன்ற வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதிரடி அபராதம்:
அதனால் அதிகபட்சமாக கேப்டன் ரிசப் பண்ட் 55, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 54 ரன்கள் எடுத்தும் டெல்லி 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா வருண், சக்கரவர்த்தி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக இந்த போட்டியில் கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ரிஷப் பண்ட் பந்து வீசுவதில் தாமதப்படுத்தினார்.

அதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசத் தவறிய டெல்லி 17 ஓவர்கள் மட்டுமே வீசியது. அதனால் கடைசி 3 ஓவரில் அம்பயர்கள் உள்வட்டத்திற்கு வெளியே ஒரு ஃபீல்டரை குறைத்து தண்டனை வழங்கியது டெல்லிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் டெல்லி பந்து வீசத் தவறிய டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட்க்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக சென்னைக்கு எதிரான கடந்த போட்டியிலும் ரிஷப் பண்ட் நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதற்கு ஏற்கனவே 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது 2வது முறையாக விதிமுறையை மீறியதால் அவருக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் முதல் முறை தவறு செய்ததால் கேப்டனுக்கு மட்டும் அபராதம் போட்ட ஐபிஎல் நிர்வாகம் டெல்லி வீரர்களுக்கு தண்டனை கொடுக்கவில்லை.

இதையும் படிங்க: இதை செஞ்சா 160 கி.மீ தொட்டு சோயப் அக்தரை மிஞ்சலாம்.. மயங் யாதவுக்கு பிரட் லீ அட்வைஸ்

ஆனால் தற்போது 2வது முறையாக நேரத்திற்குள் பந்து வீசத் தவறியதால் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அபிஷேக் போரல் உட்பட எஞ்சிய 11 டெல்லி வீரர்களுக்கும் 25% சம்பளம் (தலா 6 லட்சம்) அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் ரிஷப் பண்ட்க்கு 24 லட்சம்11 வீரர்களுக்கு தலா 6 லட்சம் என இப்போட்டியிலிருந்து மொத்தம் 90 லட்சம் சம்பளத்தை டெல்லி வீரர்கள் அபராதமாக செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement