இதை செஞ்சா 160 கி.மீ தொட்டு சோயப் அக்தரை மிஞ்சலாம்.. மயங் யாதவுக்கு பிரட் லீ அட்வைஸ்

Brett Lee
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் 21 வயதாகும் இளம் இந்திய வீரர் மயங் யாதவ் அனைவரது பாராட்டுகளை பெறும் வகையில் அட்டகாசமாக செயல்பட்டு வருகிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளராக லக்னோ அணிக்கு அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே 155.80 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்தார்.

மேலும் அப்போட்டியில் குறைந்த ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் பெங்களூருவுக்கு எதிரான போட்டியிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் வீரர் என்ற மாபெரும் சரித்திரத்தை படைத்த அவர் இந்த வருடம் அதிவேகமான பந்தை (156.70) வீசிய பவுலர் என்ற தன்னுடைய சொந்த சாதனையை முறியடித்தார்.

- Advertisement -

பிரட் லீ அட்வைஸ்:
அதனால் ஏராளமான ரசிகர்களும் வெளிநாட்டு முன்னாள் ஜாம்பவான் வீரர்களும் மயங் யாதவை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக சரியான லைன், லென்த் ஆகியவற்றுடன் அதிரடியான வேகத்தில் பந்து வீசக்கூடிய தரமான வேகப்பந்து வீச்சாளரை இந்தியா கண்டறிந்து விட்டதாக பிரட் லீ பாராட்டினார். மேலும் இந்தப் பையன் அடுத்த 18 மாதங்களில் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று ஸ்டுவர்ட் ப்ராட் கூறியிருந்தார்.

அத்துடன் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியாவில் உங்களை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் ஸ்மித் பாராட்டியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய பவுலிங் ஆக்சனில் மயங் யாதவ் சிறிய மாற்றத்தை செய்தால் இன்னும் 4 – 5 கிலோமீட்டர் எக்ஸ்ட்ரா வேகத்தில் பந்து வீச முடியும் என்று பிரட் லீ தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக தற்சமயத்தில் பந்தை கையிலிருந்து வெளியே விடும் போது மயங் யாதவ் தலை நேராக இல்லை. எனவே பந்து கையிலிருந்து ரிலீஸ் செய்யும் நேரத்தில் மயங் யாதவ் தன்னுடைய தலையை நேராக வைத்திருக்க வேண்டும் என்று பிரெட் லீ கூறியுள்ளார். இப்படி செய்தால் அவரால் இன்னும் 4 – 5 கிலோ மீட்டர் வேகத்தில் எக்ஸ்ட்ராவாக பந்து வீச முடியும் என்று பிரட் லீ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் செய்த ஒற்றை தவறால்.. டெல்லிக்கு பரிசாக கிடைத்த படுதோல்வி.. இதை கவனிச்சீங்களா?

எனவே வருங்காலங்களில் இந்த மாற்றத்தை செய்து அதிவேகமான பந்தை வீசி சோயப் அக்தரின் (161.30 கி.மீ) உலக சாதனையை மயங் யாதவ் முறியடிப்பார் என்று நம்புவதாகவும் ஜியோ சினிமா சேனலில் பிரெட் லீ கூறினார். அதே சமயம் அதற்காக எந்த அழுத்தத்தையும் எடுத்துக் கொள்ளாமல் சுதந்திரமாக விளையாடுமாறும் அவருக்கு பிரட் லீ ஆலோசனை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement