ஒருவழியா வாய்ப்பு கொடுத்தாச்சு. நீங்க ஒரு போட்டியில் சொதப்பினாலும் காலி தான் – பாத்து விளையாடுங்க

Pant-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக நாளை (டிசம்பர் 26) துவங்க உள்ளது.

indvsaus

- Advertisement -

முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய மிக மோசமான ஆட்டம் காரணமாக இந்திய அணி தோல்வி அடைந்ததாகவும் அதனால் 2வது டெஸ்ட் போட்டியில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கேப்டன் கோலியும் முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பியதால் நாளைய போட்டிக்கான அணியில் நிறைய மாறுதல்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பில் நாளைய போட்டியில் தொடக்க வீரராக ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக சுப்மன் கில் அறிமுகமாக இருக்கிறார். அதேபோன்று காயம் காரணமாக விலகிய முகமது ஷமிக்கு பதிலாக சிராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று விக்கெட் கீப்பர் சஹாவிற்கு பதிலாக வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடும் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியின் இடத்தில் ஜடேஜா தேர்வாகி உள்ளார்.

Saha

இதில் சஹாவிற்கு பதிலாக வாய்ப்பினை பெற்றுள்ள ரிஷப் பண்ட் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஏனெனில் ப்ரித்வி ஷாக்கு பதிலாக கில் அறிமுக வீரராக களம் இறங்குவதால் அவர் மீது எந்த நெருக்கடியும் இருக்காது. அவர் இயல்பாக விளையாட வேண்டும் என்று அணி நிர்வாகம் நினைக்கும். ஆனால் ரிஷப் பண்ட் ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மைதானங்களில் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி அனுபவம் உள்ளவர்.

Pant 1

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரின் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பண்ட் டெஸ்ட் வடிவத்தில் மட்டுமாவது இருக்க வேண்டும் என்பதற்காக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று இந்திய அணியின் நிர்வாகம் நினைக்கும். அதனால் இந்த போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவர் மீண்டும் வாய்ப்பை பெறுவது கடினமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement