- Advertisement -
இந்திய கிரிக்கெட்

68 இன்னிங்ஸ்கள் மிச்சம் வைத்து தோனியின் சாதனையை முடித்த ரிஷப் பண்ட் – டெஸ்ட் மேட்ச்னா தலைவன் வேறலெவல்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் குவித்துள்ளது.

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் :

இந்திய அணி சார்பாக கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வாலும் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 102 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 65 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

அவர் அடித்த இந்த 65 ரன்கள் மூலம் முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனியின் சாதனை ஒன்றினை அவர் முறியடித்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதற்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை எடுக்க மகேந்திர சிங் தோனி 144 இன்னிங்ஸ்களை எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் தனது 76-வது இன்னிங்சில் 3000 ரன்களை அடித்து தோனியின் அந்த சாதனையை 68 இன்னிங்ஸ்களுக்கு முன்னதாகவே முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : 1732 ரன்ஸ்.. தோனியை முந்திய ரிஷப் பண்ட் சேனா நாடுகளில் நாயகனாக புதிய சாதனை.. இந்தியா அபாரம்

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 3000 ரன்களை குவித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 63 இன்னிங்ஸ்களில் 3000 ரன்களை அடித்ததே சாதனையாக இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் தற்போது ரிஷப் பண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -