இது எல்லாம் நியாயமே இல்லை. சதமடித்தும் இவருக்கு அணியில் இடமில்லையா ? – ரசிகர்கள் கொதிப்பு

Ind-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் துவங்க இருக்கிறது. அடிலெய்டு மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ நாளைய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

INDvsAUS

- Advertisement -

பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல்வேறு கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இந்த பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான அணியில் துவக்க வீரர்களாக யார் இறங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஏற்கனவே உறுதியான மயங்க் அகர்வாலுடன் மற்றொரு துவக்க வீரராக பிரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐ யின் இந்த அதிரடி அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இதற்கடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இடம் என்னவெனில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தான். இந்தத் தொடரில் விருத்திமான் சஹா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக அணியில் இருக்கின்றனர். இதில் யார் ஆடும் லெவனில் தேர்வாவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது ஏனெனில் ஐபிஎல் தொடரின்போது பண்ட் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார்.

saha 2

அதேவேளையில் அனுபவ வீரர் என்பதால் சஹாவிற்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியின் இடம் கிடைத்துள்ளது. ஆனால் பயிற்சி போட்டியில் கடைசியாக விளையாடிய போது 73 பந்துகளில் 103 ரன்களை குவித்து அதிவேக சதம் அடித்த ரிஷப் பண்ட் அணியில் இடம் சேர்க்காதது ரசிகர்களிடையே வருத்தத்தை அளித்துள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தவரை பொதுவாக சிறப்பாக செயல்பட்டு வரும் பண்டிற்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அனுபவ வீரர் என்ற காரணத்தினால் சஹாவிற்கு அணியில் விளையாடும் வாய்ப்பை பிசிசிஐ அளித்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக மாற்று வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் சதத்தை அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது பயிற்சி போட்டியில் அவர் சதம் அடித்து திறமையை நிரூபித்தாலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா பயணித்தபோது பண்ட் சிட்னி மைதானத்தில் 159 ரன்கள் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Pant 1

இதனால் அணியில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்பில் பண்ட்டிற்கு தற்போது ஏமாற்றம் மட்டுமே கிடைத்ததால் ரசிகர்கள் அவருக்காக ஆதரவு குரல் எழுப்புகின்றனர். மேலும் நிச்சயம் இவர் இந்திய அணி டெஸ்ட் அணியில் விளையாட தகுதியானவர்தான் என்பது போன்றும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement