சச்சின், கபில் தேவ், தோனி போன்ற ஜாம்பவான்களை மிஞ்சிய பண்ட் – 120 வருட சாதனை உட்பட 10 சாதனைகளின் லிஸ்ட் இதோ

Rishabh Pant Ind vs ENg
- Advertisement -

பர்மிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூலை 1-ஆம் தேதியான நேற்று துவங்கிய 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெறுகிறது. இதில் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு கில் 17, புஜாரா 13 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

போதாகுறைக்கு அடுத்து வந்த விஹாரி 20, விராட் கோலி 11, ஷ்ரேயஸ் ஐயர் 15 என முக்கிய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 98/5 என திணறிய இந்தியா மோசமான தொடக்கத்தை பெற்றது. அந்த சவாலான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதானமாக பேட்டிங் செய்து இந்தியாவை மீட்டெடுக்க போராடினார்கள்.

தெறிக்கவிட்ட பண்ட்:
அதில் இருபுறமும் மெதுவாக பேட்டிங் செய்தால் விக்கெட்டை இழந்து விடுவோம் என்ற வகையில் ஒருபுறம் ஜடேஜா மெதுவாக பேட்டிங் செய்ய மறுபுறம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரிஷப் பண்ட் தனக்கே உரித்தான பாணியில் மிரட்டலாக ரன்களை சேர்த்தார். நேரம் செல்ல செல்ல 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து இந்தியாவை காப்பாற்றிய இந்த ஜோடியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற தரமான பவுலரை பவுண்டரி பறக்கவிட்ட ரிஷப் பண்ட் ஜேக் லீச் போன்ற சுழல் பந்து வீச்சாளரை இறங்கி இறங்கி மெகா சிக்சர்களை பறக்கவிட்டு அதிரடியாக சதமடித்தார்.

Rishabh-Pant

மறுபுறம் ஜடேஜா அரைசதம் கடந்த பின் தனது அதிரடி அதிகப்படுத்திய ரிஷப் பண்ட் 6-ஆவது விக்கெட்டுக்கு 222 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை தூக்கி நிறுத்திய போது 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 146 (111) ரன்களை 131.53 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் டி20 இன்னிங்ஸ் விளையாட ரசிகர்களை மகிழ்வித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷார்துல் தாகூர் 1 ரன்னில் நடை கட்டினாலும் ஜடேஜா 83* (163) ரன்கள் எடுத்து போராடிக் கொண்டிருப்பதால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 338/7 என்ற நல்ல நிலைமைக்கு போராடி வந்துள்ளது. இப்போட்டியில் அற்புதமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் படைத்த 10 சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

10 சாதனைகள்:
1. முதலில் 4 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சச்சினின் ஆல்-டைம் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. ரிஷப் பண்ட் : 24 வருடம் 271 நாட்கள்*
2. சச்சின் டெண்டுல்கர் : 25 வருடம் 000 நாட்கள்
3. சுரேஷ் ரெய்னா : 25 வருடம் 77 நாட்கள்

pant 1

2. இப்போட்டி நடைபெறும் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சதமடிக்கும் 3-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை சச்சின் டென்டுல்கர், விராத் கோலிக்கு பின் அவர் பெற்றுள்ளார்.

- Advertisement -

3. அதைவிட வெறும் 89 பந்தில் சதமடித்த அவர் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் அதிவேகமாக சதமடித்த பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் எழுதியுள்ளார். கடந்த 1902 முதல் 120 வருடங்களாக டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வரும் இந்த மைதானத்தில் உலகின் வேறு எந்த பேட்ஸ்மேனும் இதற்கு முன் 100 பந்துகளுக்கு குறைவாக சதமடித்ததே கிடையாது.

Pant

4. அதேபோல் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் 3-வது வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ஆடம் கில்கிறிஸ்ட், தினேஷ் ராம்தின் ஆகியோருக்குப் பின் பெற்றார்.

- Advertisement -

5. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் 17 வருட சாதனையையும் ரிஷப் பண்ட் தூளாக்கினார். அந்தப் பட்டியல் இதோ:
1. ரிஷப் பண்ட் : 89 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2022*
2. எம்எஸ் தோனி : 93 பந்துகள், பாகிஸ்தானுக்கும் எதிராக, 2005

Rishabh Pant Adam Gilchrist

6. இப்போட்டியின் அடித்த 146 ரன்கள் வாயிலாக 2000 ரன்களை கடந்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை அடித்து நொறுக்கினார். அந்த பட்டியல்:
1. ரிஷப் பண்ட் : 52 இன்னிங்ஸ்
2. எம்எஸ் தோனி : 60 இன்னிங்ஸ்*

7. மேலும் சேனா நாடுகள் எனப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அதிக சிக்சர்கள் அடித்த ஆசிய பேட்ஸ்மேன் என்ற கபில் தேவ், சச்சினின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ரிஷப் பண்ட் : 25 சிக்ஸர்கள்*
2. சச்சின் டெண்டுல்கர் : 23 சிக்ஸர்கள்
3. கபில் தேவ் : 21 சிக்ஸர்கள்

Pant

8. அதே சேனா நாடுகளில் 24 வயதில் அதிக சதங்கள் அடித்த 2-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் : 7
2. ரிஷப் பண்ட் : 4*
3. சௌரவ் கங்குலி : 2
4. விரேந்தர் சேவாக் : 2

9. ஆசிய கண்டத்திற்கு வெளியே அதிக சதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சரித்திரத்தையும் அவர் படைத்துள்ளார். இங்கிலாந்தில் 2, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் தலா 1 சதங்கள் என அவர் 4 சதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன் வரலாற்றில் விஜய் மஞ்ச்ரேக்கர், அஜய் ரத்னா, ரித்திமான் சாஹா என 3 இந்திய விக்கெட் கீப்பர்கள் தலா 1 சதங்கள் மட்டும் அதுவும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அடித்துள்ளார்கள் என்பது ரிஷப் பண்ட்டின் தரத்தை காட்டுகிறது.

இதையும் படிங்க : தோனியின் 17 ஆண்டுகால சாதனையை ஊதித்தள்ளிய ரிஷப் பண்ட் – உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் தான்

10. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் அதிவேகமாக சதமடித்த 2-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். அந்த பட்டியல்:
1. முகமது அசாருதீன் : 141.55, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, கொல்கத்தா, 1996
2. ரிஷப் பண்ட் : 131.53, இங்கிலாந்துக்கு எதிராக, பர்மிங்காம், 2022
3. கபில் தேவ் : 118.36, இங்கிலாந்துக்கு எதிராக, கான்பூர், 1982

Advertisement