தோனியின் 17 ஆண்டுகால சாதனையை ஊதித்தள்ளிய ரிஷப் பண்ட் – உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விஷயம் தான்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது தற்போது மீண்டும் நேற்று ஜூலை 1-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்தின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணியானது முதல் நாள் ஆட்டத்தை விளையாடி முடித்துள்ளது. அதன்படி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாட துவங்கிய இந்திய அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால் என்ன செய்யப் போகிறது என்ற பயம் அனைவரது மத்தியிலும் ஏற்பட்டிருக்கலாம்.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

ஏனெனில் இந்திய அணி 100 ரன்களை எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதால் நிச்சயம் பெரிய ஸ்கோருக்கு செல்வது கஷ்டம் என்று அனைவரும் நினைத்த வேளையில் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய ஜோடி தத்தளித்த இந்தியாவை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து இருந்தாலும் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஜோடி 222 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் சென்றது.

ஒருபுறம் முதல் நாள் ஆட்ட நேரம் முடியும் வரை விக்கெட்டை இழக்காமல் இருந்த ஜெடேஜா 83 ரன்கள் எடுத்திருந்தாலும் மறுபுறம் அணியை சரிவிலிருந்து மீட்ட ரிஷப் பண்ட் கிடுகிடுவென ரன்களை சேர்த்து 111 பந்துகளில் 20 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 146 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்திவிட்டு ஆட்டம் இழந்து வெளியேறினார்.

pant 1

அவரது இந்த அற்புதமான அதிரடி ஆட்டம் காரணமாக முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் குவித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதன்படி நேற்றயை ஆட்டத்திற்கு முன்னர் வரை இந்திய அணியின் டெஸ்ட் விக்கெட் கீப்பராக 2005 ஆம் ஆண்டு தோனி பாகிஸ்தான் அணிக்கெதிராக 93 பந்துகளில் சதம் அடித்ததே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த அதிவேகமான சதமாக பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய போட்டியில் வெறும் 89 பந்துகளில் சதம் அடித்த பண்ட் இந்திய அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனியிடமிருந்து தட்டிப் பறித்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs ENG : மீண்டும் தப்பு பண்ணிட்டீங்க, தமிழக வீரருக்காக இந்திய நிர்வாகத்தை காரணத்துடன் விளாசும் ரசிகர்கள்

அதோடு இளம் வயதிலேயே 2000 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த விக்கெட் கீப்பர் என்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் இரண்டு சதங்களை விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு ஆசிய கண்டத்திற்கு வெளியே அதிக சதம் (4) அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement