4, 6, 4, 4, 6.. ஹர்ஷல் படேலை பொளந்த இம்பேக்ட் பிளேயர்.. 453 நாட்கள் கழித்து கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்

Abhishek Porel
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 23ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்லான்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. டெல்லி அணியில் கேப்டன் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து 453 நாட்கள் கழித்து களமிறங்கியது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடைசியாக கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் 93 ரன்கள் அடித்த அவர் இந்தியா வெற்றி பெறுவதற்கு உதவினார். ஆனால் அதன் பின் கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் கடந்த வருடம் முழுமையாக விளையாடவில்லை. இருப்பினும் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள அவர் மீண்டும் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் களமிறங்கினர்.

- Advertisement -

ரிஷப் பண்ட் கம்பேக்:
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய டெல்லிக்கு துவக்க வீரர் மிட்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாட முயற்சித்த போது 20 (12) ரன்களில் அர்ஷிதீப் சிங் வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த சாய் ஹோப் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அதிரடியாக விளையாட முயற்சித்த டேவிட் வார்னர் அதிரடியாக 29 (21) ரன்களில் அவுட்டானார்.

அப்போது பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்க்கு மைதானத்தில் இருந்து ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். ஆனால் அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய சாய் ஹோப் 33 (25) ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 18 (13) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த ரிக்கி புய் 3, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 5 ரன்களில் அவுட்டாகி மேலும் பின்னடைவை ஏற்படுத்தினர்.

- Advertisement -

போதாக்குறைக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த அக்சர் பட்டேல் 21 (13) ரன்களில் அவுட்டானதால் 138/6 என திணறிய டெல்லி 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இம்பேக்ட் வீரராக வந்த அபிஷேப் போரல் 20வது ஓவரில் ஹர்ஷல் படேலை சரமாரியாக அடித்து நொறுக்கி 4, 6, 4, 4, 6, 1 என அடுத்தடுத்த பவுண்டரிகளை விளாசி அற்புதமான ஃபினிசிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: எனக்கு கிடைச்ச ஆஃபரை தோனிக்கு கொடுத்தேன்.. மற்றதெல்லாம் வரலாறா மாறிடுச்சி.. சச்சின் பகிர்ந்த பின்னணி

அந்த வகையில் இம்பேக்ட் வீரராக வந்து 32* (10) ரன்களை 320.00 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவரால் தப்பிய டெல்லி 20 ஓவர்களில் 174/9 ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ஸ்கோரை எடுத்தது. மறுபுறம் ஆரம்பத்தில் அசத்தலாக பந்து வீசிய பஞ்சாப் கடைசி நேரத்தில் சொதப்பியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷல் படேல், அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

Advertisement