உலகிலேயே இப்படி ஒரு கொடுமை நடக்குமா? ரிஷப் பண்ட்க்காக சூரியகுமாரையும் காலி பண்ணிடாதீங்க – சல்மான் பட் அதிருப்தி

Rishabh Pant Salman Butt
- Advertisement -

நியூசிலாந்தில் விளையாடிய டி20 தொடரை மழைக்கு மத்தியில் சிறப்பாக செயல்பட்டு 1 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய இளம் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை அதே மழைக்கு மத்தியில் சுமாராக செயல்பட்டு 1 – 0 (3) என்ற என்ற கணக்கில் இழந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்தியாவின் வெற்றி தோல்வி என்பதை விட சிறப்பாக செயல்பட்டும் நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது ஏன் சொதப்பலாக செயல்பட்டும் சுமாரான ஃபார்மில் இருக்கும் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது ஏன் என்பதே அனைவரது கேள்வியாக இருந்தது.

Rishabh Pant Sanju Samson

- Advertisement -

ஏனெனில் 2015இல் அறிமுகமாகி 2வது போட்டியை 2019ல் விளையாடி 2021 வரை நிலையற்ற வாய்ப்புகளைப் பெற்ற சஞ்சு சாம்சன் இந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு ரிஷப் பண்ட்டை விட அதிக ரன்களை குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி காரணத்துக்காக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் ஏராளமான வாய்ப்புகளைப் பெற்றும் சிறப்பாக செயல்படாத ரிசப் பண்ட் ராஜா வீட்டுப் பிள்ளையை போல் பிசிசிஐ வாரிசு போல் மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

சூரியகுமாரையும் விட்டுவைக்கல:

அவரை அடுத்த தலைமுறை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக உருவாக்க நினைக்கும் அணி நிர்வாகம் 1 முதல் 7 வரை அனைத்து இடங்களிலும் வாய்ப்பு கொடுத்து உள்ளங்கையில் தாங்கி வருகிறது. குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தில் ஆரம்பத்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக வாய்ப்பு பெற்று சொதப்பிய ரிஷப் பண்ட்டை எப்படியாவது வெற்றிகரமாக செயல்பட வைக்க வேண்டும் என்று விரும்பும் அணி நிர்வாகம் கடைசி ஒருநாள் போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் களமிறங்கும் 4வது இடத்தை பிடுங்கி அவரிடம் கொடுத்தது. அதில் வழக்கம் போல 10 ரன்களில் ரிஷப் பண்ட் அவுட்டான நிலையில் வழக்கத்திற்கு மாறாக 5வது இடத்தில் களமிறங்கிய சூரியகுமார் 6 (10) ரன்களில் அவுட்டானார்.

Suryakumar Yadav

மொத்தத்தில் ஒருவருக்காக பேட்டிங் ஆர்டரை தலைகீழாக மாற்றிய அணி நிர்வாகத்தால் கடைசி போட்டியில் தோல்வியை சந்திக்க காத்திருந்த இந்தியாவை மழை வந்து காப்பாற்றியது. இந்நிலையில் உலகிலேயே சுமாரான பார்மில் இருக்கும் ரிசப் பண்ட் போன்ற ஒருவருக்காக உச்சகட்ட பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவை கீழ் வரிசையில் களமிறங்க வைத்த கொடுமை இந்திய அணியில் மட்டுமே நடக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே சஞ்சு சாம்சனின் வாழ்க்கையை வீணடித்தது போதாது என்று தற்போது அட்டகாசமான ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் கேரியரையும் காலி செய்து விடாதீர்கள் என்ற வகையில் தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரிஷப் பண்ட் அதிகப்படியான சுதந்திரத்துடன் விளையாடும் அதிரடியான வீரர். ஆனால் இந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் நாம் அனைவரும் எதிர்பார்த்ததில் பாதியளவு செயல்பாடுகளை கூட அவர் வெளிப்படுத்தவில்லை. அவர் இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்திருக்க வேண்டும். ஆனால் சூரியகுமார் யாதவுக்கு பதிலாக அவர் ஏன் மேலே பேட்டிங் செய்ய அனுப்பப்பட்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் தனது வாழ்க்கையின் உச்சகட்ட ஃபார்மில் இருந்து சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் ஒருவரது இடத்தில் பார்மின்றி தவிக்கும் மோசமான வீரரை நீங்கள் விளையாட வைத்துள்ளீர்கள். ஆனால் அங்கே நல்ல ஃபார்மில் இருப்பவர் தான் அதிக ஓவர்களை எதிர்கொண்டு விளையாட வேண்டும்”

Butt

“தற்சமயத்தில் உலகிலேயே நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் சூரியகுமார் யாதவை போய் பார்மின்றி தவிக்கும் ஒருவருக்கு கீழே களமிறக்குவது சரியானதல்ல. அந்த வகையில் இந்திய அணியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் நீங்கள் செய்யும் இது போன்ற மாற்றங்கள் நல்ல ஃபார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் ஆட்டத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் தனது வாழ்வின் உச்சகட்ட பார்மில் இருக்கும் அவர் அதிக பந்துகளை எதிர்கொண்டு விளையாட வேண்டும்” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement