இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க இவங்க தான் காரணம் – குற்றம் சாட்டியுள்ள பண்ட்

Pant
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருவதால் அவர்களுக்கு தற்போது சிறிய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் கே.எல் ராகுல் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னதாக காயம் ஏற்பட்டு அணியிலிருந்து வெளியேறவே புதிய கேப்டனாக இளம் வீரரான ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார்.

INDvsRSA

- Advertisement -

அவரது தலைமையில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. டெல்லியில் ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 211 ரன்கள் அடித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாமல் ரன்களை வாரி வழங்கியதால் மோசமான தோல்வியை சந்தித்திருந்தனர்.

அதனை தொடர்ந்து கட்டாக் மைதானத்தில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே குவித்ததால் தென்ஆப்பிரிக்கா அணி இந்த போட்டியையும் எளிதாக சேஸிங் செய்து வென்றது. இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டி முடிந்த பின்னர் பேட்டியளித்து இருந்த இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் :

Avesh khan

நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும்போது 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். அதேபோன்று பந்து வீச்சிலும் முதல் 7-8 ஓவர்கள் வரை சிறப்பாக துவங்கிய நாங்கள் பிற்பாதி ஓவர்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த தவறிவிட்டோம். அதேபோன்று தென்னாப்பிரிக்கா வீரர்களின் விக்கெட்டையும் வீழ்த்த முடியாமல் திணறியதால் தென் ஆப்பிரிக்கா அணி மிக எளிதாக எங்களை வீழ்த்தியது என்று பண்ட் கூறியிருந்தார்.

- Advertisement -

இதில் கேப்டன் பண்ட் மறைமுகமாக குறிப்பிட்டது யாதெனில் : முதல் ஏழு எட்டு ஓவர்கள் முற்றிலும் வேகப்பந்து வீச்சாளர்களால் மட்டுமே வீசப்பட்டது. பிற்பாதியில் ஸ்பின்னர்கள் நிறைய ரன்களை கசிய விட்டதால் போட்டி கையை விட்டு சென்றதாக மறைமுக குறிப்பினை வழங்கி இருந்தார். அவர் கூறியது போலவே சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்சர் பட்டேல் மற்றும் சாஹல் பந்துவீச்சில் நிறைய ரன்கள் கசிந்தது. அதுதவிர பெரிய அளவில் விக்கெட்டுகள் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க : IND vs RSA : வயதில் மின்னும் தரம், டி20 உலககோப்பையில் விளையாட தகுதியானவர் – ஜாம்பவான்கள் பாராட்டு

இதன் காரணமாகவே சுழற்பந்து வீச்சு சரியில்லை என்பது போன்று பண்ட் பேசியுள்ளார். ஏற்கனவே இரண்டு போட்டிகளை இந்திய அணி இழந்துவிட்டதால் நிச்சயம் மீதமுள்ள மூன்று போட்டிகளில் அணியில் சில மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement