IND vs RSA : வயதில் மின்னும் தரம், டி20 உலககோப்பையில் விளையாட தகுதியானவர் – ஜாம்பவான்கள் பாராட்டு

Bhuvaneswara Kumar
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவை தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்டு வரும் இந்தியா இது வரை நடைபெற்ற 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து 2 – 0* (5) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 212 ரன்களை அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் நிர்ணயித்த 149 ரன்கள் இலக்கை எளிதாக சேஸிங் செய்து வென்றது. அதனால் சொந்த மண்ணில் ராஜாவாக கருதப்படும் இந்தியாவை கேப்டன் ரோகித் சர்மா இல்லாத தருணத்தை பயன்படுத்தி மண்ணை கவ்வ வைத்து வரும் தென் ஆப்பிரிக்கா இந்த தொடரின் கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Henrich Klassen

- Advertisement -

முன்னதாக கட்டாக் நகரில் நடைபெற்ற 2-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சுமாராக பேட்டிங் செய்து 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிசான் 34 (21) ரன்களும் ஷ்ரேயஸ் ஐயர் 40 (35) ரன்களும் எடுக்க கடைசியில் தினேஷ் கார்த்திக் 30* (21) நல்ல பினிஷிங் கொடுத்து ஓரளவு மானத்தை காப்பாற்றினார்.

போராடிய புவி:
அதை தொடர்ந்து 149 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ஹென்றிக்ஸ் 4, பிரிட்டோரியஸ் 4, வேன் டெர் டுஷன் 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பவர் பிளே ஓவர்களில் அனலாக பந்துவீசி காலி செய்த சீனியர் பவுலர் புவனேஸ்வர் குமார் இந்தியாவுக்கு அற்புதமான தொடக்கம் கொடுத்தார். அதனால் 29/3 என தென் ஆப்பிரிக்கா தடுமாறியதால் இந்தியா வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸென் எஞ்சிய பவுலர்களை சரமாரியாக அடித்து 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்கள் எடுத்தார். அவருடன் கேப்டன் பவுமா 35 (30) ரன்களும் மில்லர் 20* (15) ரன்களும் ரன்கள் எடுத்ததால் 18.2 ஓவரிலேயே 149/6 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா எளிதாக வென்றது.

Shreyas Iyer IND

டெல்லியில் நடந்த முதல் போட்டியில் 4 ஓவர்களில் 1 விக்கெட் எடுத்து 43 ரன்களை வாரி வழங்கிய புவனேஸ்வர் குமார் இப்போட்டியில் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை எடுத்து 3.25 என்ற அற்புதமான எக்கனாமியில் பந்துவீசி தனது தரத்தை காட்டினார். கட்டாக் போட்டியில் தனி ஒருவனாக போராடிய அவருக்கு இதர பவுலர்கள் கை கொடுத்திருந்தால் நிச்சயம் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.

- Advertisement -

மேலும் நேற்றைய போட்டியில் இந்தியா தோற்றதாலும் டி20 கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் என்ற சாதனையையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. புவனேஸ்வர் குமார் : 4/13
2. ராகுல் சஹார் : 3/15
3. ஜஸ்பிரித் பும்ரா : 3/16
4. யுவராஜ் சிங் : 3/17
5. ரவிச்சந்திரன் அஷ்வின் : 3/24

Gavaskar

ஜாம்பவான்கள் பாராட்டு:
தற்போது 32 வயதை கடந்துள்ள அவர் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் போன்ற இதர இந்திய பவுலர்கள் காட்டிலும் வயதில் மூத்தவராகவும் அனுபவத்தில் சீனியராகவும் திகழ்கிறார். வயது அதிகரிக்க அதிகரிக்க செயல்பாட்டில் ஜொலிக்கும் புவனேஸ்வர் குமார் வரும் டி20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு துருப்பு சீட்டாக செயல்படுவார் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆவார் அபாரமாக செயல்பட்டார். வெள்ளைப்பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகவில்லை என்றாலும் அதை செய்யும் ஸ்விங் செய்யக் கூடிய திறமை அவரிடம் உள்ளது. அப்படிப்பட்ட அவருக்கு 3-வது ஓவரை பந்துவீச ரிஷப் பண்ட் கொடுத்ததில் அவர் விக்கெட்டும் எடுத்தார். ஏனெனில் அந்தப் பந்துக்கு பின் அதிகம் ஸ்விங் ஆகவில்லை என்பதால் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போயிருக்கும். இருப்பினும் ஆஸ்திரேலியா போன்ற வேகம், பவுன்ஸ், ஸ்விங் ஆகக்கூடிய கால சூழ்நிலைகளில் (டி20 உலககோப்பைகளில்) அவர் நிச்சயம் இந்தியாவுக்கு பெரிய வரப்பிரசாதம் ஆவார்” என்று கூறினார்.

Smith 1

அதே போல் புவனேஸ்வர் குமார் பற்றி தென்னாபிரிக்க ஜாம்பவான் கிரேம் ஸ்மித் பேசியது பின்வருமாறு. “அவர் அற்புதமாக செயல்பட்டதை நான் மகிழ்ச்சியாக பார்த்தேன். அவர் நுணுக்கங்கள் அடிப்படையில் சிறப்பாக சிந்திக்கிறார். இன்ஸ்விங் பந்துகளுக்கு ஹென்றிக்ஸ் தடுமாறுவார் என்பதை தெரிந்து அவரை கச்சிதமாக பந்துவீசி அவுட் செய்தார்.

இதையும் படிங்க : IND vs RSA : மீண்டும் அதே பழைய கேப்டன்ஷிப் சொதப்பல் ! ரிஷப் பண்ட்டை மீண்டும் விமர்சிக்கும் முன்னாள் வீரர்

அதே போல் அடுத்த வந்த ட்வயன் பிரிட்டோரியசை நக்குள் பந்தை பயன்படுத்தி காலி செய்தார். கட்டுப்பாடு மற்றும் திட்டங்களை வெற்றிகரமாக செயல் படுத்துவதில் அவர் சிறப்பாக செயல்படுகிறார்” என்று பாராட்டினார்.

Advertisement