பழைய ஃபார்முக்கு வந்த ரிஷப் பண்ட்.. யூசுப் பதானின் சாதனையை தூளாக்கி 2 புதிய சாதனை

Rishabh Pant 41
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ரிசப் பண்ட் விளையாடி வருகிறார். கடந்த வருடம் கார் விபத்தால் விளையாடாத அவர் தற்போது முழுமையாக காயத்திலிருந்து குணமடைந்து விளையாடி வருகிறார். அவருடைய தலைமையில் இதுவரை 6 போட்டியில் விளையாடியுள்ள டெல்லி 2 வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆஃப் செல்வதற்கு போராடி வருகிறது.

குறிப்பாக ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற்ற 26வது லீக் போட்டியில் லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் 39, ஆயுஷ் படோனி 55* ரன்கள் உதவியுடன் 168 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

- Advertisement -

ரிஷப் பண்ட் சாதனை:
அதை சேசிங் செய்த டெல்லிக்கு பிரிதிவி ஷா 32, கேப்டன் ரிஷப் பண்ட் 41, ஜேக் ப்ரேஷர்-மெக்குர்க் 55 ரன்கள் அடித்து 18.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் இந்த வருடம் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 194 ரன்களை 157.72 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள ரிஷப் பண்ட் முழுமையாக ஃபார்முக்கு வந்துள்ளார் என்றே சொல்லலாம்.

அத்துடன் லக்னோவுக்கு எதிராக அடித்த 41 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் 104 போட்டிகளில் 332 ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் மிகவும் இளம் வயதில் 3000 ரன்கள் அடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சுப்மன் கில் : 24 வருடம் 215 நாட்கள்
2. விராட் கோலி : 26 வருடம் 186 நாட்கள்
3. ரிஷப் பண்ட் : 26 வருடம் 191 நாட்கள்
4. சஞ்சு சாம்சன் : 26 வருடம் 320 நாட்கள்
5. சுரேஷா ரெய்னா : 27 வருடம் 161 நாட்கள்

- Advertisement -

அதை விட 2028 பந்துகளிலேயே ரிஷப் பண்ட் 3000 ரன்களை அடித்துள்ளார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் பந்துகள் அடிப்படையில் மிகவும் வேகமாக 3000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற யூசுப் பதான் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல் (பந்துகள்):
1. ரிஷப் பண்ட் : 2028*
2. யூசுப் பதான் : 2082
3. சூரியகுமார் யாதவ் : 2130
4. சுரேஷ் ரெய்னா : 2135
5. எம்.எஸ். தோனி : 2152

இதையும் படிங்க: எவ்வளவு தைரியம் இருந்தா அப்படி செஞ்சுருப்பீங்க.. ஜான்சனுக்கு கொடுத்த பதிலடி பற்றி விராட் கோலி

முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்படும் படுத்தத்தில் 2024 டி20 உலகக் கோப்பையில் ரிசப் பண்ட் தேர்வு செய்யப்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். அதே போல தற்போது அசத்துவதால் உலகக் கோப்பையில் ரிசப் பண்ட் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement