22 ஆயிரம் ரசிகர்களின் முன்னிலையில் பிரமாண்டமான சாதனையை நிகழ்த்தி – ரிஷப் பண்ட் அசத்தல்

Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மார்ச் 12ஆம் தேதி பெங்களூர் மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கிய இந்த ஆட்டத்தில் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 252 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய இலங்கை அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே குவித்தது.

INDvsSL cup

- Advertisement -

பின்னர் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி போட்டி ஆரம்பித்த 6 ஓவர்களில் முற்றிலுமாக சுருண்டது. இறுதியில் 109 ரன்களுக்கு தங்களது முதல் இன்னிங்சை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கை அணியானது இந்திய அணியை விட 143 ரன்கள் பின்னிலை அடைந்தது. அதன்பிறகு 143 ரன்கள் என்ற பலமான முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இந்த இரண்டாவது இன்னிங்சிலும் தற்போது வரை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இரண்டாம் நாள் இரவு உணவு இடைவேளை வரை இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ரன்கள் குவித்து 342 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. போட்டியில் இன்னும் மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் தற்போதே இந்திய அணி கிட்டத்தட்ட 90 சதவீத வெற்றியை உறுதி செய்து உள்ளது என்றே கூறலாம். இப்படி இந்த இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக ரிஷப் பண்ட் திகழ்ந்தார்.

pant 1

ஏனெனில் இந்த இரண்டாவது இன்னிங்சில் 31 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்கள் என 50 ரன்கள் விளாசினார். ஏற்கனவே முதல் இன்னிங்சில் 39 ரன்களை வேகமாக அடித்த இவர் தற்போது இந்த இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஒன்றினை 22 ஆயிரம் ரசிகர்களின் மத்தியில் படைத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அதிவேக அரை சதம் அடித்த இந்திய வீரராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் திகழ்ந்து வந்தார். 1982 ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 30 பந்துகளில் அவர் அரைசதம் அடித்தார். இதுவே இந்திய பேட்ஸ்மன் சார்பாக அதிவேகமாக அடிக்கப்பட்ட அரைசதமாக இன்று வரை இருந்தது.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்து அசத்திய பும்ரா – குவியும் வாழ்த்து

இந்த 40 ஆண்டு கால சாதனையை இன்று பெங்களூர் மைதானத்தில் இலங்கை அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். இந்த போட்டியில் 28 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில் ரிஷப் பண்ட் 7 பவுண்டரி 2 சிக்சர்கள் என 50 ரன்கள் குவித்து அமர்க்களப்படுத்தி அதிவேக அரைசதம் அடித்த வீரராக சாதனையை நிகழ்த்தினார். இவர்களை தொடர்ந்து ஷர்துல் தாகூர் 31 பந்துகளிலும், வீரேந்திர சேவாக் 32 பந்துகளிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அரைசதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement