டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்து அசத்திய பும்ரா – குவியும் வாழ்த்து

Kapil
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி மார்ச் 12-ஆம் தேதி பெங்களூரில் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 252 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவித்து அசத்தினார்.

Bumrah 1

- Advertisement -

அதன்பின்னர் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தது. இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று தங்களது முதல் இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியானது 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் பின்தங்கியது. இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் மற்றும் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார்கள்.

இந்நிலையில் இந்த போட்டியின் முதலாவது இன்னிங்சில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தலான சாதனை நிகழ்த்தியுள்ளார். அதோடு கபில் தேவின் மிக முக்கியமான சாதனையும் அவர் சமன் செய்துள்ளார்.

kapil dev 1

அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் பும்ரா இந்த இன்னிங்சில் எடுத்த 5 விக்கெட்டுகளோடு சேர்த்து இதுவரை 29 போட்டிகளில் 8 ஆவது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருமுறையும், ஆஸ்திரேலியா மற்றும் தற்போது இந்தியாவில் ஒருமுறையும் இவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படி 8 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்த 29 போட்டிகள் மட்டுமே எடுத்துக் கொண்டார். இந்த ஒரு புள்ளி விவரம் தான் தற்போது இவரையும் கபில்தேவையும் சமன் செய்துள்ளது.

- Advertisement -

அதன்படி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவ் மற்றும் பும்ரா ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் தான் 29 டெஸ்ட் போட்டிகளில் எட்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய சிறப்பான பந்து வீச்சாளர்களாக இருக்கின்றனர். இதன்மூலம் கபில் தேவின் மிக நீண்ட கால சாதனையை தற்போது பும்ரா சமன் செய்துள்ளார். அவரின் இந்த சாதனைக்காக தற்போது பும்ராவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Bumrah

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிராக குறைந்து ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரிசையில் இவர் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்த போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்ற வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். இவருக்கு முன்னதாக இந்த இடத்தில் இஷாந்த் சர்மா 54 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்ததே மிகச் சிறப்பான பந்துவீச்சாக இருந்தது.

இதையும் படிங்க : அஜித் பேன்சை தொடர்ந்து முகமது ஷமியிடம் அப்டேட் கேட்ட விஜய் பேன்ஸ் – மைதானத்தில் நடந்தது என்ன?

இந்நிலையில் தற்போது இஷாந்த் ஷர்மாவை பின்னுக்குத்தள்ளி பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். இவர்கள் இருவரை தொடர்ந்து வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் 72 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி உள்ளனர். மேலும் அதேபோன்று 8 முறை அவர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தாலும் இந்திய மண்ணில் அவர் கைப்பற்றும் முதல் 5 விக்கெட் இன்னிங்ஸ் இதுதான் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

Advertisement