டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம். கேப்டன் யாருனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க – விவரம் இதோ

Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் கலந்துகொண்டு விளையாடியபோது பீல்டிங் செய்கையில் தோள்பட்டையில் காயமடைந்து மைதானத்தில் வலியால் துடித்தார். உடனே மைதானத்திற்கு வந்த மருத்துவ நிர்வாகிகள் அவரை பரிசோதனை செய்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை கூறி மைதானத்திலிருந்து அழைத்துச் சென்றனர்.

Iyer

- Advertisement -

பின்னர் மைதானத்தில் இருந்து வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு நகர்வு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஐந்து மாத காலம் ஓய்வு வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளில் இருந்து விளங்கினார்.

அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார் ஷ்ரேயாஸ் ஐயர். இந்நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப அக்டோபர் மாதம் வரை ஐயர் காத்திருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இந்த ஐபிஎல் தொடரில் அவருக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட இருப்பவர் யார் ? என்பது குறித்த கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

Iyer-1

வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சென்னையில் துவங்கும் இந்த ஐபிஎல் தொடருக்காக தற்போது டெல்லி அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி அணியில் தவான், ரஹானே, அஸ்வின் என மூத்த வீரர்கள் இருக்கையில் இளம் விக்கெட் கீப்பிங் பண்ட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே டெல்லி அணி தடுமாறிய போது இளம் வீரரான ஐயரின் கைக்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டது. அதனைப் போன்றே தற்போது இளம் வீரரான ரிஷப் பண்ட்டிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் இந்த ஐபிஎல் தொடரிலும் ஒரு கலக்கு கலக்குவார் என்று தெரிகிறது.

Advertisement