இந்திய அணியிடம் இருந்து வந்த அழைப்பு.. தர்மசாலாவிற்கு பறந்த ரிங்கு சிங்.. எதற்கு தெரியுமா? – ஹேப்பி நியூஸ்

Rinku-Singh
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் நான்கு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் ஏற்கனவே இந்த தொடரை கைப்பற்றிவிட்டது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது நாளை மறுதினம் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்காக ஏற்கனவே தர்மசாலா சென்றடைந்த இந்திய வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் டெஸ்ட் அணியில் இடம்பெறாத இந்திய அணியின் இளம் வீரரான ரிங்கு சிங் தற்போது தரம்சாலா சென்று இந்திய அணி வீரர்களுடன் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டேஸ்ட் அணியில் இடம்பெறாத ரிங்கு சிங் தர்மசாலா சென்றது ஏன்? அவர் அங்கு எதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்? என்பது குறித்த தகவல் வெளியாகி தற்போது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

அந்த வகையில் ரிங்கு சிங் தர்மசாலா சென்றது ஒரு போட்டோ ஷூட் நிகழ்வில் பங்கேற்கத்தான். அதாவது எதிர்வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறப்போகும் வீரர்களுக்கான போட்டோ ஷூட் தரம்சாலாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

அதில் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட கிட்டத்தட்ட உறுதியான வீரர்களை ஃபோட்டோ ஷூட் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ரிங்கு சிங்கும் இந்த போட்டோ ஷூட்டில் பங்கேற்றதன் மூலம் தற்போது டி20 உலக கோப்பை இந்திய அணியில் பினிஷராக அவரே செயல்படுவார் என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படிங்க : பணம் சாம்பாதிங்க வேணாம்ன்னு சொல்லல.. அதுக்குன்னு இப்படியா பண்ணுவீங்க.. இந்திய வீரர்கள் பற்றி பிரவீன் குமார்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக பார்க்கப்படும் ரிங்கு சிங் டி20 உலககோப்பை வீரர்களுக்கான போட்டோ ஷூட்டில் பங்கேற்றதன் மூலம் டி20 உலககோப்பையில் அவரது இடம் உறுதியாகியுள்ளது. இந்த விடயம் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement