பணம் சாம்பாதிங்க வேணாம்ன்னு சொல்லல.. அதுக்குன்னு இப்படியா பண்ணுவீங்க.. இந்திய வீரர்கள் பற்றி பிரவீன் குமார்

Praveen Kumar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போதெல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு கொடுக்கும் முன்னுரிமையை ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடுவதற்கு கொடுப்பதில்லை. அதன் உச்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசான் ஆகியோரை ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கடந்த மாதம் வெளிப்படையாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் அதை செய்ய தவறியதால் இந்திய அணியின் 2023 – 24 மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிசான் ஆகியோரை பிசிசிஐ நீக்கியுள்ளது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேரான ரஞ்சிக் கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களை பாதுகாப்பதற்கு பிசிசிஐ எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு கபில் தேவ் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

பணம் சம்பாதீங்க:
மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் இந்தியாவுக்காக விளையாடாத சமயங்களில் தங்களை வளர்த்த மாநில அணிகளுக்கு ரஞ்சிக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி கோடிக்கணக்கான பணம் சம்பாதிப்பதை யாரும் தடுக்கவில்லை என்று முன்னாள் வீரர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்காக தாய் நாட்டுக்காகவும் மாநில அணிக்காகவும் விளையாட மாட்டேன் என்று சொல்வது நியாயமற்றது என்று இந்திய வீரர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். பணம் சம்பாதியுங்கள். யார் அதிலிருந்து உங்களை தடுக்கிறார்? அதற்காக நீங்கள் நாட்டுக்காக அல்லது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடக் கூடாது என்று அர்த்தமல்ல”

- Advertisement -

“இந்த எண்ணம் தற்போது அனைத்து வீரர்களின் மனதிலும் உருவாகியுள்ளது. என்னுடைய காலத்தில் ஐபிஎல் தொடருக்கு ஒரு மாதம் முன்பாகவே ஓய்வு எடுத்து பின்னர் விளையாடுவேன். பொதுவாக நீங்கள் பணத்தை விடக்கூடாது என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள். அதற்காக இப்படி நடந்து கொள்வது நியாயமற்றது. ஒரு வீரர் அனைத்தையும் சமநிலையுடன் பார்க்க வேண்டும்”

இதையும் படிங்க: 12 பாயிண்ட்ஸ் விட்றாதீங்க.. எல்லாமே இங்கிலாந்துக்கு சாதகமா இருக்கு.. இந்திய அணியை எச்சரித்த கவாஸ்கர்

“பணம் முக்கியம் தான். ஆனால் அதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறானது” என்று கூறினார். இந்த நிலையில் இசான் கிசான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறார். ஆனால் பிசிசிஐ அறிவுரைப்படி ஸ்ரேயாஸ் அய்யர் ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement