IND vs IRE : என்னுடைய பர்ஸ்ட் மேட்ச்லயே இப்படி நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி – ரிங்கு சிங் பேட்டி

Rinku-Singh
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங் பினிஷராக பல போட்டிகளில் அந்த அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். அவரது இந்த பினிஷிங் திறமைகளை கண்ட பல்வேறு முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும், நிபுணர்களும் நிச்சயம் அவர் வெகு விரைவாக இந்திய அணிக்காக தேர்வாவார் என்று கூறியிருந்தனர்.

Rinku-Singh-2

- Advertisement -

அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த தொடரில் இடம்பெறாத ரிங்கு சிங் தற்போது பும்ரா தலைமையிலான அயர்லாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டி20 அணியில் இடம் பிடித்திருந்தார். அதன்படி நடைபெற்று முடிந்த அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அறிமுகமாகி இருந்தாலும் அந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று நடைபெற்று முடிந்த இரண்டாவது டி20 போட்டியில் ரிங்கு சிங்கிற்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இந்த இரண்டாவது போட்டியின் போது சஞ்சு சாம்சன் ஆட்டம் இழந்த பின்னர் ஐந்தாவது வீரராக களமிறங்கிய ரிங்கு சிங் துவக்கத்தில் 15 பந்துகளை சந்தித்து நிதானமாக 15 ரன்கள் குவித்து இருந்தாலும் பின்னர் கடைசி இரண்டு ஓவர்களில் வழக்கமான தனது அதிரடியை வெளிப்படுத்தி இரண்டு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என அதிரடி காட்டி 21 பந்துகளில் 38 ரன்கள் குவித்து இறுதி நேரத்தில் இந்திய அணியின் ரன் குவிப்பை உயர்த்தினார்.

Rinku-Singh-1

அவரது இந்த அதிரடி காரணமாக இந்திய அணி 185 ரன்கள் என்கிற பெரிய ரன் குவிப்பை எட்டியது. பின்னர் தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்த வேளையில் ரிங்கு சிங்கின் அதிரடியான ஆட்டத்திற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய ரிங்கு சிங் கூறுகையில் : நான் இந்த போட்டியில் விளையாடிய விதம் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. ஐபிஎல் தொடரில் நான் என்ன செய்தேனோ அதையே சர்வதேச கிரிக்கெட்டிலும் செய்கின்றேன். அந்த வகையில் மிகுந்த நம்பிக்கையுடன் பொறுமையாக களத்தில் நின்று விளையாடி இந்த போட்டியில் நான் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை அணியில் மெகா குழப்பம், 8 நிமிடங்கள் காணாமல் போன சுப்மன் கில் – கலாய்த்த வாசிம் ஜாபர், நடந்தது என்ன?

கடந்த 10 ஆண்டுகளாக நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். என்னுடைய திறனை தொடர்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து களமிறங்கி வருகிறேன். முதல் போட்டியிலேயே எனக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement