லக்னோ அணிக்கெதிரான இந்த போட்டியில் என்னுடைய பேட்டிங் பிளான் இதுதான் – ஆட்டநாயகன் ரிங்கு சிங் பேட்டி

Rinku Singh
- Advertisement -

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சூப்பர் ஓவர் வரை சென்று அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் தற்போது புள்ளி பட்டியலில் அவர்கள் எட்டாவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

என்னுடைய பேட்டிங் பிளான் இதுதான் : ஆட்டநாயகன் ரிங்கு சிங்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய லக்னோ அணியும் 155 ரன்கள் குவிக்கவே போட்டி டிராவில் முடிவடைந்து. பின்னர் சூப்பர் ஓவரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி ஒரு ரன்னில் லக்னோ அணியை தடுத்து நிறுத்தி அசத்தலான வெற்றியையும் பதிவு செய்திருந்தது.

- Advertisement -

இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரிங்கு சிங் 51 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 83 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய ரிங்கு சிங் கூறியதாவது : நான் எப்பொழுது பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் 3-4 விக்கெட்டுகள் விழுந்திருக்கும்.

அந்த நேரத்தில் என்னுடைய கவனம் எல்லாம் இன்னிங்சை கண்ட்ரோல் செய்து இறுதிவரை கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டும்தான். இந்த போட்டியிலும் நான் களமிறங்கியபோது என்னுடைய பேட்டிங் திட்டத்தை மிகவும் எளிதாக வைத்துக் கொண்டேன். அதாவது தொடர்ந்து ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது சிங்கிள்ஸ் மற்றும் டபுள்ஸ் என ரன்கள் கிடைக்கும்.

- Advertisement -

அதேபோன்று மோசமான பால்கள் வரும்போது அதை பவுண்டரி அடிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த வகையிலேயே இன்னிங்சை கட்டமைத்து கொண்டு சென்றேன். இறுதி நேரத்தில் அடித்து விளையாட வேண்டும் என்பது எப்போதுமே எனக்கு வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் கடைசி ஓவரை ஸ்பின்னர் வீச வந்ததும் அந்த ஓவரை டார்கெட் செய்து அடித்தேன்.

இதையும் படிங்க : சூப்பர் ஓவரை வீச சுனில் நரேனை தேர்வு செய்தது ஏன்? விளக்கத்தை கூறி பாராட்டிய – அஜின்க்யா ரஹானே

இந்த போட்டியில் பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங்கிலும் என்னுடைய செயல்பாடு சிறப்பாக இருந்தது. சிறுவயதிலிருந்தே நான் இயற்கையாகவே பிட்டாக இருப்பவர் என்பதனால் பீல்டிங் செய்ய எனக்கு மிகவும் பிடிக்கும். நான் முழு உடற்தகுதியுடன் இருப்பதால் என்னால் வேகமாக ஓடி மைதானத்தின் இடைவெளிகளை கவர் செய்ய முடிகிறது. அதன் காரணமாகவே நான் விரும்பி பீல்டிங் செய்கிறேன் என்றும் ரிங்கு சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement