சூப்பர் ஓவரை வீச சுனில் நரேனை தேர்வு செய்தது ஏன்? விளக்கத்தை கூறி பாராட்டிய – அஜின்க்யா ரஹானே

Sunil Narine and Rahane
- Advertisement -

லக்னோ நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது சூப்பர் ஓவர் வரை சென்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவிக்க அடுத்ததாக விளையாடிய லக்னோ அணி 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வேளையில் அவர்களும் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து சரியாக 155 ரன்கள் குவித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதன் காரணமாக சூப்பர் ஓவர் முறை நடைமுறை படுத்தப்பட்டது.

சுனில் நரேன் சூப்பர் ஓவரை வீசியது ஏன்? : ரஹானே விளக்கம்

அந்த சூப்பர் ஓவரினை கொல்கத்தாணி சார்பாக சுனில் நரேன் வீசினார். அப்படி சூப்பர் ஓவரை வீசிய சுனில் நரேன் முதல் பந்தில் நிக்கோலஸ் பூரானை ஆட்டமிழக்க வைத்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்த அவர் மூன்றாவது பந்தில் எய்டன் மார்க்ரமை வீழ்த்தியதால் 2 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு கொல்கத்தா அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதன்பின்னர் களத்திற்கு வந்த ரிங்கு சிங் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்த போட்டியின் போது சூப்பர் ஓவரை சுனில் நரேன் மிகச் சிறப்பாக வீசியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து சுனில் நரேனை சூப்பர் ஓவரை வீச அழைத்தது ஏன்? என்பது குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் அஜின்க்யா ரஹானே சில விளக்கத்தை அளித்துள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : உண்மையிலேயே இந்த போட்டியில் சுனில் நரேன் தான் சூப்பர் ஓவரின் சிறந்த ஆப்ஷன் என்று முடிவு செய்தோம். ஏனெனில் இந்த போட்டியில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே அவர் மிகச்சிறப்பாக பந்துவீச கூடியவர். அதுமட்டுமின்றி ஸ்பின்னர்களுக்கு எதிராக இந்த பெரிய மைதானத்தில் பவுண்டரி அடிப்பது மிகப் பெரிய சவால். அவரை எதிர்த்து எளிதாக பவுண்டரி அடிக்க முடியாது .

- Advertisement -

இதையும் படிங்க : எம்.எஸ் தோனியின் 15 ஆண்டுகால மாபெரும் சாதனையை முறியடித்த ரிங்கு சிங் – விவரம் இதோ

அதன் காரணமாகவே அவரை தேர்வு செய்தோம். அவர் மட்டுமின்றி இரண்டு வீரர்கள் எங்களது திட்டத்தில் இருந்தனர். கார்த்திக் தியாகி மற்றும் வைபவ் அரோரா ஆகியோரையும் நாங்கள் சூப்பர் ஓவரை வீச வைக்கலாம் என்று நினைத்தோம். இருந்தாலும் அவர்கள் இருவரையும் விட அனுபவத்தில் சுனில் நரேன் மிகப்பெரியவர் என்பதன் காரணமாகவே அவருக்கு இந்த சூப்பர் ஓவர் வாய்ப்பை வழங்கினோம் என அஜின்க்யா ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement