7 வருஷம் காத்திருந்தேன்.. எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்.. இன்னும் ஒரு கோப்பை மிச்சமிருக்கு.. ரிங்கு சிங் பேட்டி

Rinku SIngh 3
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரின் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்று சாதனை படைத்தது. குறிப்பாக அடித்து நொறுக்கி வந்த ஹைதராபாத் அணியை சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வீழ்த்தியது. அதனால் 2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா அணி மும்பை மற்றும் சென்னையை தொடர்ந்து இரண்டாவது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்தது.

அந்த வெற்றியை தற்போது கொல்கத்தா அணி வீரர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வரிசையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தம்முடைய கனவு நிஜமாகியுள்ளதாக கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்புக்காக கடந்த 7 வருடங்களாக கொல்கத்தா அணியில் காத்திருந்ததாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ரிங்குவின் அடுத்த கனவு:
மேலும் கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு ஆலோசகராக வந்த கௌதம் கம்பீர் முக்கிய காரணம் என்றும் ரிங்கு பாராட்டியுள்ளார். அத்துடன் தற்போது ஐபிஎல் கோப்பையை வென்ற தமக்கு அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதே கனவு என்றும் ரிங்கு தெரிவித்துள்ளார். இது பற்றி கொல்கத்தா அணியின் இணையத்தில் அவர் பேசியது.

“7 வருடங்களில் என்னுடைய கனவு நிஜமாகியுள்ளது. ஒரு வழியாக நான் கோப்பையை தூக்குவேன். கொல்கத்தா அணியால் நான் பெருமைப்படுகிறேன். இது கடவுளின் திட்டம். இந்த வெற்றிக்காக நீங்கள் ஒருவரை மட்டும் பாராட்ட முடியாது. ஏனெனில் அனைவரும் கடினமாக உழைத்துள்ளனர். இருப்பினும் கௌதம் கம்பீர் சார் வந்தது முதல் எங்கள் அணியில் நிறைய விஷயங்கள் மாறியது. குறிப்பாக அவர் சுனில் நரேனை முன்னதாகவே களமிறக்கினார்”

- Advertisement -

“வெங்கடேஷ் ஐயர் கடந்த 5 – 6 போட்டிகளாக சிறப்பாக பேட்டிங் செய்தார். மொத்தத்தில் நாங்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினோம். இங்கிருந்து நான் நொய்டா நகருக்கு செல்ல உள்ளேன். பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு செல்ல உள்ளேன். அங்கே நான் உலகக் கோப்பையையும் தூக்குவதையும் நீங்கள் பாருங்கள் நண்பர்களே” என்று கூறினார். அதாவது முதன்மை அணியில் இடம் பெறாவிட்டாலும் 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்தியாவின் ரிசர்வ் வீரராக ரிங்கு தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: கோப்பை ஜெய்க்கலனாலும் எல்லாருக்கும் நாம அதை சொல்லி கொடுத்துருக்கோம்.. ஹைதெராபாத்துக்கு காவ்யா மாறன் ஸ்பீச்

அதனால் இந்திய கிரிக்கெட் அணியுடன் பயணிக்கும் அவர் 2024 உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ளார். எனவே ஒருவேளை இந்தியா உலகக் கோப்பையை வென்றால் அதை தூக்கி முத்தமிடும் வாய்ப்பு ரிங்குவுக்கு கிடைத்துள்ளது. ஒருவேளை ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் காயத்தை சந்திக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக நேரடியாக விளையாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement