கோப்பை ஜெய்க்கலனாலும் எல்லாருக்கும் நாம அதை சொல்லி கொடுத்துருக்கோம்.. ஹைதெராபாத்துக்கு காவ்யா மாறன் ஸ்பீச்

Kavya Maran
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தட்டிச் சென்றது. குறிப்பாக மே 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் ஹைதராபாத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. அதனால் 2012, 2014க்குப்பின் 3வது கோப்பையை வென்ற கொல்கத்தா 2வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்தது.

மறுபுறம் அந்த ஃபைனலில் ஹைதராபாத் கோப்பையை வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் இந்த வருடம் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் விளாசி, டெல்லிக்கு எதிராக 5 ஓவரில் 100 ரன்கள் அடித்து, லக்னோவுக்கு எதிராக 9.2 ஓவரில் 166 ரன்களை சேசிங் செய்த ஹைதராபாத் வரலாற்று வெற்றிகளை பெற்றது. ஆனால் அப்படி சரமாரியாக எதிரணிகளை அடித்து நொறுக்கிய ஹைதராபாத் முக்கியமான பைனலில் வெறும் 113க்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

காவ்யா ஸ்பீச்:
அதனால் ஐபிஎல் வரலாற்றின் இறுதிப்போட்டியில் ஆல் அவுட்டான முதல் அணி என்ற மோசமான சாதனையை ஹைதராபாத் படைத்தது. அத்துடன் ஐபிஎல் ஃபைனலில் குறைந்தபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் ஹைதராபாத் மோசமான வரலாறு படைத்தது. அந்த வகையில் ஹைதராபாத் அணிக்கு 2024 சீசன் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் கடந்த வருடம் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த ஹைதராபாத் இம்முறை ஃபைனல் வரும் அளவுக்கு அட்டகாசமாக விளையாடியதாக அதன் உரிமையாளர் காவ்யா மாறன் பாராட்டியுள்ளார். அதை விட டி20 கிரிக்கெட்டை எப்படி அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை அனைவருக்கும் ஹைதராபாத் காண்பித்ததாகவும் அவர் பெருமை தெரிவித்துள்ளார். ஃபைனல் தோல்வியால் கண்கலங்கி நின்ற அவர் அதையெல்லாம் தாண்டி துவண்டு கிடந்த தன்னுடைய அணி வீரர்களிடம் உத்வேகமாக பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நீங்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள். அதை சொல்வதற்காகவே நான் இங்கே வந்தேன். உண்மையாக நீங்கள் எப்படி டி20 கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பதை மாற்றி மறுவரையறை செய்துள்ளீர்கள். அதனால் அனைவரும் நம்மைப் பற்றி பேசுகின்றனர். இறுதிப் போட்டி நடைபெற்ற நாள் நமக்கு சரியாக அமையவில்லை. ஆனால் உண்மையில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நன்றாக விளையாடினீர்கள்”

இதையும் படிங்க: டி20 உ.கோ வெற்றிக்கான ஆசிர்வாதம் கிடைச்சுருக்கு.. இனிமேல் இந்தியா சாக்கை சொல்ல முடியாது.. வாசிம் அக்ரம் 

“மிக்க நன்றி. கடந்த வருடம் நாம் கடைசி இடத்தைப் பிடித்தாலும் இந்த வருடம் உங்களுடைய திறமையின் காரணமாக ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் நம்மை பார்க்க வந்தார்கள் என்று நினைக்கிறேன். அதனால் நம்மைப் பற்றி அனைவரும் பேசுகின்றனர். கொல்கத்தா கோப்பையை வென்றாலும் அனைவரும் நாம் விளையாடிய ஸ்டைலை பற்றி பேசுகின்றனர். அதற்காக நன்றி. சோகமாக இருக்க வேண்டாம். ஏனெனில் நாம் ஃபைனலில் விளையாடியுள்ளோம். அது மற்றொரு சாதாரண போட்டி கிடையாது” என்று கூறினார்.

Advertisement