IPL 2023 : முதல் 5 – 6 வருசத்துல விராட் கோலி இப்டி தான் விளையாடினாரு, அவர் பெரிய அளவில் வருவாரு பாருங்க – இளம் வீரரை பாராட்டும் கைப்

Kaif
- Advertisement -

ஐபிஎல் 2023 தொடரில் மார்ச் 31ஆம் தேதி துவங்கி மந்தமாக நடைபெற்ற நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டி தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உண்மையான உச்சகட்ட பரபரப்பான திரில்லர் விருந்தை படைத்தது. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் தமிழக வீரர்கள் சாய் சுதர்சன் 53 (38) ரன்களும் விஜய் சங்கர் 63* (24) ரன்களும் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் 204/4 ரன்கள் குவித்தது. அதைத் துரத்திய குஜராத்துக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் வெங்கடேஷ் ஐயர் 83 (40) ரன்களும் நிதிஷ் ராணா 45 (29) ரன்களும் எடுத்து வெற்றி உறுதி செய்து அவுட்டானார்கள்.

- Advertisement -

ஆனால் அப்போது ஆண்ட்ரே ரசல் 1, சுனில் நரேன் 0, தாகூர் 0 என 3 வீரர்களை அடுத்தடுத்து சாய்த்து ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்த ரசித் கான் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதனால் கொல்கத்தா தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது ஜோஸ்வா லிட்டில் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் சிக்ஸர்களை பறக்க விட்ட இளம் வீரர் ரிங்கு சிங் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரின் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்களை பறக்க விட்டு 48* (21) ரன்கள் விளாசி நம்ப முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

விராட் கோலி மாதிரி:
அப்படி ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன் கடைசி ஓவரில் யாருமே 5 சிக்ஸர்களை அடித்து வெற்றிகரமாக சேசிங் செய்து கொடுக்காத அசாத்தியமான வெற்றியை சாத்தியமாக்கிய ரிங்கு சிங் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். மேலும் என்னதான் கடைசி ஓவரில் யாஷ் தயாள் சுமாராக வீசினாலும் அந்த உச்சகட்ட அழுத்தத்தில் திறமையின்றி எட்ஜ் கொடுக்காமல் அனைத்து பந்துகளையும் சிக்ஸர்களாக பறக்க விட்டிருக்க முடியாது என்று கூறலாம்.

RCB

முன்னாதாக 2021 சீசனில் லக்னோவுக்கு எதிராக 211 ரன்களை துரத்தும் இதே போல கடைசி நேரத்தில் போராடிய அவர் 40 (15) ரன்களை விளாசி கொல்கத்தாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்து 2 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றியை நழுவ விட்டார். ஆனால் இம்முறை அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ள அவர் வருங்காலங்களில் இன்னும் முன்னேற்றமடைந்து சிறப்பாக செயல்படும் திறமை கொண்டவராகவே காட்சியளிக்கிறார். இந்நிலையில் முதல் 5 – 6 வருடங்களில் பெங்களூரு அணிக்காக அவ்வப்போது சிறப்பாக விளையாடிய விராட் கோலியை போலவே ரிங்கு சிங் செயல்படுவதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

பெங்களூரு அணியில் 2011 – 2013 வரை விராட் கோலியுடன் இணைந்து விளையாடிய அனுபவத்தைக் கொண்ட அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஆரம்பகாலங்களில் விராட் கோலியும் இதே வயதில் தான் விளையாட துவங்கினார். குறிப்பாக முதல் 5 – 6 வருடங்களில் ஆர்சிபி அணியில் விராட் கோலி எப்படி விளையாடினாரோ அதே போல ரிங்கு சிங் விளையாடுகிறார். அந்த போட்டியில் அவருடைய ஆட்டம் என்ன அற்புதமாக இருந்தது. குறிப்பாக கடைசி சிக்ஸரை அவர் இறங்கி வந்து அடித்தார்”

Kaif

 

- Advertisement -

“அந்த போட்டியில் யாருமே கொல்கத்தா வெல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் கொல்கத்தா ரசிகர்கள் தொலைக்காட்சி ஆஃப் செய்திருப்பார்கள். ஆனால் ரிங்கு சிங் அங்கே கொல்கத்தாவுக்கு அபாரமாக விளையாடினார்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2008 முதலே பெங்களூரு அணியில் விளையாடி வரும் விராட் கோலி 2010 வரை தடுமாற்றமாக செயல்பட்டு 2011 சீசனில் தான் 16 போட்டிகளில் 557 ரன்களை எடுத்து அசத்தத் துவங்கி இன்று ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:CSK vs RR : கடைசி பந்து வரை அதிரடியாக போராடிய தோனி – ஜடேஜா, 3 பேரின் முக்கிய நேர சொதப்பலால் நூலிழையில் பறிபோன வெற்றி

மேலும் விராட் கோலி எப்போதும் நிதானமாக ஆரம்பித்து நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்தும் ஸ்டைலை கொண்டவர் என்பதை அறிவோம். அதேபோல இப்போட்டியில் முதல் 14 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ரிங்கு சிங் கடைசியில் அடுத்த 15 பந்துகளில் 39 ரன்களை விளாசி வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement