தோத்தாலும் அவர் நல்லா விளையாடுனா மொத்த இந்தியாவும் சந்தோசப்படுது.. கம்பீர் பாராட்டு

Gautam Gambhir 2
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இத்தொடரை குறைந்தபட்சம் சமன் செய்வதற்கு டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது.

முன்னதாக போர்ட் எலிசபெத் நகரில் டிசம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 6/2 என்ற பின்னடவை சந்தித்த இந்தியாவுக்கு சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 56 ரன்கள் குவித்து சரிவை சரி செய்தார்.

- Advertisement -

தோத்தாலும் சந்தோசம்:
அவருடன் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இளம் வீரர் ரிங்கு சிங் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து 68* (39) ரன்கள் விளாசி இந்தியா 180/7 ரன்கள் குவிக்க உதவினார். குறிப்பாக தென்னாப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ரம் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தில் அவர் நேராக பறக்க விட்ட சிக்சர் மைதானத்தில் இருந்த கண்ணாடிகளை உடைத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அந்த வகையில் உண்மையாகவே அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் ரிங்கு சிங் ஃபினிஷிங் செய்து இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அசத்திய விதம் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் ரிங்கு சிங் சிறப்பாக விளையாடியது 2வது போட்டியில் சந்தித்த தோல்வியை தாண்டி மொத்த இந்தியாவையும் மகிழ்ச்சியடைய வைத்ததாக ஜாம்பவான் கௌதம் கம்பீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்பிலும் சிறப்பாக விளையாடி கடினமாக உழைத்து இந்தியாவுக்காக விளையாட வரும் போது உங்களின் ஒவ்வொரு இன்னிங்ஸ்க்கும் தனி மதிப்பு இருக்கும். அப்படி கடினமாக உழைத்து வந்த நீங்கள் உங்களுடைய ஒவ்வொரு இன்னிங்ஸையும் முதல் இன்னிங்ஸ் போல் விளையாடுவீர்கள்”

இதையும் படிங்க: 2024 ஐ.பி.எல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம்போகப்போகும் வீரர் இவர்தான் – தமிழக வீரர் அஷ்வின் கணிப்பு

“அந்த வகையில் விளையாடும் ரிங்கு சிங் எந்த வெற்றியைப் பெற்றாலும் அதற்கு அவர் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் எந்த வாய்ப்பையும் எளிதாக பெறவில்லை. எனவே ரிங்கு சிங் சிறப்பாக செயல்படும் போது அது அவருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்ச்சியடைய வைக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் கடைசி போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement