தொடர்ச்சியா அடிக்குறாரு.. இந்திய அணிக்கு புதிய மேட்ச் வின்னர் கிடைச்சுருக்காரு.. இளம் வீரரை பாராட்டிய ஏபிடி

- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. அதையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர்களை ஒயிட் வாஷ் செய்து வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையும் தகர்த்த இந்தியா புதிய சாதனை படைத்தது. அந்த தொடரில் சிவம் துபே, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை நிரூபித்தனர்.

குறிப்பாக கடைசி போட்டியில் 22/4 என இந்தியா தடுமாறிய போது கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடிய ரிங்கு சிங் நேரம் செல்ல செல்ல அதிரடியாக செயல்பட்டு 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். மேலும் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்த அவர் மொத்தம் 69* ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் செய்து இந்தியா 212 ரன்கள் குவிக்க உதவினார்.

- Advertisement -

மேட்ச் வின்னர்:
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கடைசி ஓவரில் அடுத்தடுத்து 5 சிக்சர்கள் அடித்து குஜராத்துக்கு எதிராக அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அதில் முதல் வாய்ப்பிலேயே அயர்லாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றிய அவர் அடுத்ததாக 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளுக்கு எதிரான நாக் அவுட்டில் அதிரடியாக செயல்பட்டு இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார்.

அதை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரிலும் கடைசி போட்டியில் அதிரடியாக விளையாடி இந்தியா தொடரை சமன் செய்ய உதவிய அவர் தற்போது ஆப்கானிஸ்தான் தொடரிலும் ரசிகர்களின் பாராட்டை பெரும் அளவுக்கு அசத்தியுள்ளார். அந்த வகையில் பெரும்பாலான போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் ரிங்கு சிங் இந்திய அணிக்கு புதிய மேட்ச் வின்னராக கிடைத்துள்ளதாக தென்னாபிரிக்க ஜாம்பவான் பிறர் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரிங்கு அற்புதமான பிளேயர். மேட்ச் வின்னர். அதை விட அவர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. எப்போதுமே தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியைப் பெற்று கொடுக்கும் வீரர்கள் தான் உங்களுக்கு தேவை” என்று கூறினார்.

இதையும் படிங்க: அஷ்வினை சமாளிக்கனும்னா இதை பண்ணுங்க போதும்.. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு – கெவின் பீட்டர்சன் அறிவுரை

அந்த வகையில் ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்று வரும் ரிங்கு இதுவரை 15 சர்வதேச டி20 போட்டிகளில் 356 ரன்களை 89 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார். குறிப்பாக ஒவ்வொரு 2.3 பந்துகளுக்கு ஒரு முறை பவுண்டரிகளை பறக்க விடும் அவர் 7 முறை நாட் அவுட்டாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement