அசத்திய சூரியகுமார்.. 9 ஃபோர்ஸ் 2 சிக்ஸ்.. மைதான கண்ணாடியை அடித்து நொறுக்கி.. இந்தியாவை காப்பாற்றிய ரிங்கு சிங்

rinku singh glass
- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா களமிறங்கியுள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் சூரியகுமார யாதவ் தலைமையிலான இளம் அணி விளையாடுகிறது. அதில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு போர்ட் எலிசபெத் நகரில் 2வது போட்டி தொடங்கியது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய துவக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 6/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவுக்கு கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய திலக் வர்மா 29 (20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

நொறுக்கிய ரிங்கு சிங்:
அந்த நிலைமையில் வந்த ரிங்கு சிங் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் தென்னாபிரிக்க பவுலர்களை தம்முடைய ஸ்டைலில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் புரட்டி எடுத்த சூரியகுமார் யாதவ் 3வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதம் கடந்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 56 (36) ரன்களில் சரிவை சரி செய்து ஆட்டமிழந்தார். ஆனால் அப்போது வந்த ஜித்தேஷ் சர்மா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் மறுபுறம் நிதானமாக விளையாடிய ரிங்கு சிங் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து இந்தியா 150 ரன்கள் தாண்ட உதவினர். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்கம் வீசிய 19வது ஓவரின் 5வது பந்தில் இறங்கி வந்து முரட்டுத்தனமான சிக்சரை அடித்த அவர் கடைசி பந்தில் நேராக தெறிக்க விடும் சிக்சரை பறக்க விட்டார்.

- Advertisement -

அப்படி நேராக சென்ற 2வது சிக்சர் மைதானத்தின் எதிர்புறத்தில் செய்தியாளர்கள் அமர்ந்து செய்திகளை சேகரிக்கக்கூடிய அறையின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகளை நொறுக்கியது. அந்தளவுக்கு அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 9 பவுண்டரி 1 சிக்ஸருடன் 68* (39) ரன்களை 174.36 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வாங்கி சூப்பர் பினிஷிங் கொடுத்து இந்தியாவை காப்பாற்றினார்.

இதையும் படிங்க: அசத்திய சூரியகுமார்.. 9 ஃபோர்ஸ் 2 சிக்ஸ்.. மைதான கண்ணாடியை அடித்து நொறுக்கி.. இந்தியாவை காப்பாற்றிய ரிங்கு சிங்

அவருடன் கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 19 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது 19.3 ஓவரில் இந்தியா 180/7 ரன்கள் எடுத்த போது மழை வந்ததால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement