இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத இறுதியில் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. அதோடு கடந்த அக்டோபர் 31-ம் தேதி இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து பணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டு விட்டது.
சொந்த ஊரில் பங்களா வாங்கிய ரிங்கு சிங் :
அந்த வகையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி சார்பாக 13 கோடி ரூபாய் என்கிற பெரிய தொகைக்கு ரிங்கு சிங் முதன்மை வீரராக தக்க வைக்கப்பட்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் கடந்த இரண்டு சீசன்களாகவே அந்த அணியின் நட்சத்திர வீரராக உருமாறியதோடு மட்டுமின்றி இந்திய அணிக்காகவும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தற்போது 13 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் வேலையாக தனது சொந்த ஊரான அலிகாரில் பங்களா ஒன்றினை வாங்கி அங்கு தனது குடும்பத்தாருடன் குடி பெயர்ந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.
சிறுவயதில் இருந்தே ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்த அவர் தற்போது தனது கடின உழைப்பால் மிகப்பெரிய இடத்திற்கு சென்றுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கொல்கத்தா அணிக்காக 55 லட்ச ரூபாய் என்கிற அடிப்படைத் தொகையில் விளையாடி வந்த ரிங்கு சிங் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 13 கோடி ரூபாய் சம்பளத்துடன் விளையாட இருக்கிறார்.
ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளூர் வீரர்களுக்கு இலவசமாக ஹாஸ்டல் மற்றும் பயிற்சியின் போது உணவு என உதவி வரும் அவர் தற்போது கோடிகளில் சம்பாதிக்க இருப்பதால் மேலும் தொடர்ச்சியான உதவிகளை செய்வார் என்று தெரிகிறது. அதோடு சிறிய வயதிலிருந்து தனது குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ரிங்கு சிங் நினைத்திருந்த வேளையில் தற்போது அவர் தனது குடும்பத்திற்காக பெரிய பங்களா ஒன்றினை விலைக்கு வாங்கியுள்ளார்.
இதையும் படிங்க : 42 வயதில் முதல் முறையாக ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து முக்கிய முடிவை கையிலெடுத்த – ஜேம்ஸ் ஆண்டர்சன்
இந்திய மதிப்பில் அவர் வாங்கியுள்ள அந்த பங்களாவின் விலை மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது. தனது மகன் கிரிக்கெட் வீரராக இருந்தும் கூட அவரது தந்தை இன்னும் சொந்த ஊரில் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.