IND vs IRE : முதல் டி20 போட்டியிலேயே இந்திய அணிக்காக அறிமுகமான 2 இளம் வீரர்கள் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Rinku Singh Prasid Krishna
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்துள்ள இந்தியா அடுத்ததாக அயர்லாந்துக்கு சென்று அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள இத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து 11 மாதங்கள் கழித்து ஒரு வழியாக கம்பேக் கொடுப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கேப்டனாக களமிறங்கும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை வழி நடத்தும் முதல் பவுலர் என்ற தனித்துவமான சாதனையும் படைத்துள்ளார்.

IND-vs-IRE

- Advertisement -

கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் கருப்பு குதிரையாக கருதப்படும் அவர் 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சந்தித்த காயத்திலிருந்து 2 முறை குணமடைந்து களமிறங்கி போதிலும் மீண்டும் காயமடைந்து வெளியேறினார். இருப்பினும் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள அவர் 2023 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் இத்தொடரில் கேப்டனாக கம்பேக் கொடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

2 அறிமுக வீரர்கள்:
அந்த நிலையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் ரிங்கு சிங் மாற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய 2 இளம் வீரர்கள் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் களமிறங்கும் வாய்ப்பை பெற்றனர். தங்களுடைய கனவு தொப்பியை கேப்டன் பும்ராவிடமிருந்து வாங்கிய அவர்கள் அதை தாய் நாட்டுக்காக வாய்ப்பை பெற்றதை நினைத்து உணர்ச்சி கலந்த நெகிழ்ச்சியுடன் தங்களுடைய தலையில் அணிந்து கொண்டனர்.

Rinku Singh

அதில் உத்திரபிரதேசத்தில் சாதாரண சிலிண்டர் விற்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து 2018 முதல் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பெஞ்சில் அமர்ந்து வந்த ரிங்கு சிங் கடந்த வருடம் முதல் முறையாக லக்னோவுக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட போராடி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்தார். அதனால் இந்த வருடம் முழுமையான வாய்ப்புகளைப் பெற்ற அவர் 14 போட்டிகளில் 474 ரன்களை 149.53 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அழுத்தமான மிடில் ஆர்டரில் மிகச் சிறந்த ஃபினிஷராக செயல்பட்டார்.

- Advertisement -

அதிலும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்கள் அடித்து வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுத்த அவரை 2024 டி20 உலக கோப்பையில் மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் இடது கை பேட்ஸ்மனாகவும் ஃபினிஷராகவும் வாய்ப்பளித்து வளர்க்க வேண்டிய தேர்வுக்குழு வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் கண்டுகொள்ளாதது விமர்சனங்களை எழுப்பியது. அதனால் தற்போது வாய்ப்பு பெற்றுள்ள அவர் அடிமட்டத்தில் இருந்தாலும் கடுமையாக உழைத்தால் சாதிக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவுக்கு அறிமுகமாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Prasidh-Krishna

அவரை போல 2018 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடும் பிரசித் கிருஷ்ணா 51 போட்டிகளில் 49 விக்கெட்களை 8.92 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்துள்ளார். அதன் காரணமாக கடந்த 2021இல் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே அறிமுகமாகி 12 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வந்த அவர் காயமடைந்து வெளியேறினார். இருப்பினும் தற்போது குணமடைந்துள்ள அவர் 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் பேக்-அப் பவுலராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:15 சாதனை ஸ்பெஷல் கேரியரில் கிங் கோலி எவ்வளவு கி.மீ ஓடியுள்ளார் தெரியுமா? வியக்க வைக்கும் மாஸ் புள்ளிவிவரம் இதோ

அதற்கு முன்பாக களமிறங்கி தயாராக வேண்டும் என்பதற்காகவும் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பதற்காகவும் இந்த தொடரில் பிரசித் கிருஷ்ணாவும் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளது.

Advertisement