IPL 2023 : கவலைப்படாதே நண்பா, யாஷ் தயாளுக்கு அனுப்பிய மெசேஜை பகிர்ந்த ரிங்கு – கேகேஆர், ரசிகர்கள் மெகா ஆதரவு

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற 13வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சாய் சுதர்சன் 53 (38) விஜய் சங்கர் 63* (24) என தமிழக வீரர்களின் சிறப்பான ரன் குவிப்பால் 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய கொல்கத்தாவுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 15, ஜெகதீசன் 6 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் நிதிஷ் ரானா 45 (29) ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 83 ரன்களும் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தனர்.

ஆனால் அப்போது ஆண்ட்ரே ரசல் 1, சுனில் நரேன் 0, தாகூர் 0 என 3 வீரர்களை அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த ரசித் கான் போட்டிகள் திருப்பு முனையை ஏற்படுத்தினார். அதனால் கேள்விக்குறியான கொல்கத்தாவின் வெற்றியை ஜோஸ்வா லிட்டில் வீசிய 19வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு நெருங்கிய ரிங்கு சிங் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த 5 சிக்சர்களை விளாசி 48* (21) ரன்களை அடித்து நம்ப முடியாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

சாம்பியன் தயால்:
ஏனெனில் ஒட்டு மொத்த உலக டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை அடித்து 30 ரன்களை விளாசி வெற்றிகரமாக சேசிங் செய்ததே கிடையாது. அந்தளவுக்கு அசாத்தியமான வெற்றியை பெற்று உலக சாதனை படைத்த ரிங்கு சிங் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். ஆனால் அதே சமயம் துரதிஷ்டவசமாக 5 சிக்ஸர்களை கொடுத்து மோசமான சாதனை படைத்து வெற்றியை தாரை வார்த்த யாஷ் தயாளுக்கு ரசிகர்கள் ஆறுதலும் ஆதரவும் தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில் யாருமே வேண்டுமென்று வெற்றிப் பறிபோகட்டும் என்ற எண்ணத்தில் அப்படி செயல்பட்டிருக்க மாட்டார்கள். அத்துடன் வெறும் 25 வயது மட்டுமே நிரம்பிய இளம் வீரரான அவர் கடந்த சீசனில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து குஜராத் முதல் கோப்பை வெல்ல முடிந்தளவுக்கு சிறப்பான பங்காற்றினார். அதை விட 2007 டி20 உலக கோப்பையில் அவரை விட மோசமாக யுவராஜ் சிங்கிடம் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை கொடுத்து மோசமான உலக சாதனை படைத்த ஸ்டுவர்ட் ப்ராட் அதற்காக மனம் தளராமல் கடுமையாக உழைத்து இன்று மொத்தமாக 700க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை சாய்த்து ஜாம்பவானாக ஜொலித்து வருகிறார்.

- Advertisement -

அவரை விட மோசமாக 2016 டி20 உலக கோப்பை ஃபைனலில் கடைசி ஓவரில் கார்லஸ் ப்ரத்வெய்ட் அடுத்தடுத்த 4 சிக்ஸர்கள் அடிக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்டு கோப்பை தாரை வார்த்த பென் ஸ்டோக்ஸ் அதற்காக மனம் தளராமல் கடுமையாக உழைத்து 2019 உலகக் கோப்பை, ஹெண்டிங்லே ஆஷஸ் டெஸ்ட், 2022 டி20 உலக கோப்பை இங்கிலாந்துக்கு மகத்தான வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக ஜொலித்து வருகிறார். எனவே தோல்வி தான் வெற்றிக்கு முதல் படி என்ற கூற்றுக்கு இணங்க கடினமாக உழைத்தால் இதிலிருந்து உங்களால் சாதிக்க முடியும் என்று யாஷ் தயாளுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

அதே போல் கிரிக்கெட்டில் தரமான வீரர்களுக்கும் இது போன்ற நிகழ்வுகள் அரங்கேறியுள்ளதால் இதைப் பற்றி கவலைப்படாமல் நிச்சயமாக உங்களால் கம்பேக் கொடுக்க முடியும் சாம்பியன் என்று யாஷ் தயாளை கொல்கத்தா அணி நிர்வாகம் பாராட்டியுள்ளது. அதை விட கடந்த போட்டியில் கொல்கத்தா வென்ற போது “நீங்க பெரிய பிளேயர்” என்று ரிங்கு சிங்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷ் தயாள் பாராட்டியுள்ளார். அதற்கு நன்றி நண்பா என்ற வகையில் ரிங்கு சிங் பதிலளித்தது தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:வீடியோ : சாதனையுடன் ஆர்சிபியை சரமாரியாக அடித்து நொறுக்கிய பூரன், கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது எப்படி

அப்படி தன்னுடைய நண்பராக இருக்கும் அவருக்கு போட்டி முடிந்த பின் “கிரிக்கெட்டில் இவ்வாறு நடப்பது சகஜமாகும். நீங்கள் கடந்த வருடம் சிறப்பாக செயல்பட்டீர்கள்” என்று மெசேஜ் அனுப்பி ஆதரவு கொடுத்ததாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளது ரசிகர்களின் நெஞ்சங்களை தொடுகிறது.

Advertisement