ipl இல் மேக்ஸ்வெல் பின்னடைவு..! இந்த வீரர் தான் காரணம்..! ரிக்கிபாய்ட்டிங் விளக்கம்

- Advertisement -

நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணி தனது மோசமான ஆட்டத்தால் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. மேலும் டெல்லி அணியில் விளையாடிய அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் இந்த தொடரில் மோசமாக விளையாடினார். அவரின் இந்த ஆட்டத்திற்கு மற்றுமொரு டெல்லி வீரரான ரிஷப் பண்ட் தான் காரணம் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாயிண்டிங் தெரிவித்துள்ளார்.

Ricky-Ponting

- Advertisement -

ஆஸ்திரலியாவில் நடைபெற்ற பிக் பேஷ் போட்டிகளில் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் பின்னர் ஆஸ்த்ரேலிய அணியில் இடம் பிடித்தார். .ஆஸ்திரேலிய அணியில் சிறப்பான சர்வதேச ஆல்ரவுண்டர் வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்தார் மேக்ஸ்வெல். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியில் விளையாடிய மேக்ஸ்வெலின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் எதிர்பார்க்கப்படடது.இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தின் போது மேக்ஸ்வெல்லை ரூ.9 கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. ஆனால் ஒரு போட்டியில் கூட அவர் தனது சிறப்பானஆட்டத்தை வெளிக்காட்டவில்லை.

glenn-maxwell

இந்த தொடரில் இவரது பேட்டிங் சராசரி 14 மட்டுமே. இதுவரை 12 போட்டிகளில் 169 ரன்களை மட்டுமே இந்த அதிரடி பேட்ஸ்மேனால் சேர்க்க முடிந்தது.இவரை பற்றி பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரும், தற்போதைய டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கி பாயின்டிங் கூறுகையில் “இந்த தொடரில் மேக்ஸ்வெல் சரியாக விளையாடாமல் போனதற்கு ரிஷப் பண்ட் தான் காரணம். ஏனென்றால் மேக்ஸ்வெல் ஏலமெடுக்கும் போது அணியில் 4 வது பேட்டிங் வரிசையில் தான் களமிறங்க அணி முடிவு செய்யப்பட்டது.

rishab-pandey

“ஆனால் மேக்ஸ்வெல் இடையில் வெளிநாடு பயணம் சென்று திரும்பிய பி;போது அவர் இடத்தில் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். அவர் நன்றக விளையாடியதால் அவரை அந்த இடத்தில் இருந்து எடுக்க முடியவில்லை. இதனால் மேக்ஸ்வெல்லை 5 வது தர வரிசையில் இரக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. அந்த தர வரிசை அவருக்கு புதிது என்பதால் அவரால் சரியாக விளையாட முடியாமல் போனது ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement