டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ராகுல் கண்டிப்பா வேணும், பேட்டிங் ஆரிடரில் அந்த மாற்றம் செய்ங்க – ரோஹித்துக்கு பாண்டிங் ஆலோசனை

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் 2வது சாம்பியனை தீர்மானிக்கும் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்காக கடந்த 2021 முதல் நடைபெற்று வரும் லீக் சுற்றில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா முதல் அணியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே சமயம் தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 2 – 1 (4) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த ஃபைனலுக்கு தகுதி பெற அகமதாபாத் நகரில் நடைபெறும் கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

WTC

- Advertisement -

சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இந்தியா 3வது போட்டியில் தடுமாறினாலும் 4வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி வாகை சூடி இதே ஆஸ்திரேலியாவை ஃபைனலில் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2013க்குப்பின் ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்தியா இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் வென்று அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது. ஆனால் பொதுவாகவே இங்கிலாந்து மண்ணில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இந்தியா 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் கூட நியூசிலாந்திடம் முக்கிய நேரங்களில் சொதப்பி கோப்பையை தாரை வார்த்தது.

பாண்டிங் ஆலோசனை:
எனவே இம்முறை அங்கு சிறப்பாக செயல்படுவதற்கு முன்கூட்டியே நல்ல திட்டமிடல் அவசியமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு அதிகமாக கை கொடுக்கக்கூடிய இங்கிலாந்து சூழ்நிலைகளில் கேஎல் ராகுல் வெற்றிக்கு அவசியமானவர் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஃபைனல் நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் 2018ஆம் ஆண்டு 149 ரன்கள் குவித்த ராகுல் 2021ஆம் ஆண்டு அருகில் இருக்கும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 129 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

KL-Rahul-and-GIll

மொத்தத்தில் இங்கிலாந்தில் குறிப்பாக லண்டனில் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வரும் ராகுல் தற்சமத்தில் சுமாரான பார்மில் இருந்தாலும் குறைந்தபட்சம் மிடில் ஆர்டரில் விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் ரிக்கி பாண்டிங் அவருக்காக பேட்டிங் ஆர்டரில் மாற்றத்தை இப்போதே செய்யுமாறு கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கேஎல் ராகுல் அணியிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் சுப்மன் கில் இணைந்துள்ளார். தேவையான அளவு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடியுள்ள இவர்கள் ஒரே நேரத்தில் அணியில் இடம் பிடிக்கும் திறமையை கொண்டுள்ளார்கள்”

- Advertisement -

“எனவே சுப்மன் கில் டாப் ஆர்டரில் பேட்டிங்கை துவங்கலாம். கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் விளையாடும் திறமை பெற்றுள்ளார். ஏனெனில் ஏற்கனவே இங்கிலாந்து சூழ்நிலைகளில் விளையாடியுள்ள அவர் டாப் ஆர்டரை தவிர்த்து மிடில் ஆர்டரில் விளையாடும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன் இங்கிலாந்தை பொறுத்த வரை ஒரு நாளில் நீண்ட நேரம் பந்து ஸ்விங் ஆகும். ஒருவேளை குளிரான சூழ்நிலை இருந்தால் அந்த இன்னிங்ஸ் முழுவதும் பந்து ஸ்விங் ஆகும்” என்று கூறினார்.

Ponting

அதாவது ஸ்விங் ஆகக்கூடிய இங்கிலாந்து சூழ்நிலைகளில் கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய திறமை கொண்டுள்ளதால் நிச்சயமாக இந்திய பேட்டிங் வரிசையில் விளையாட வேண்டும் என்று பாண்டிங் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 2018ஆம் ஆண்டு அடித்த 149 ரன்களை ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்கி தான் எடுத்தார். மறுபுறம் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவுட்டாகி விடுவார் என்பதை அனைவருமே அறிவோம்.

இதையும் படிங்க:IPL 2023: இனிமே அம்பயர் பிரச்சனை பாதி குறையும். ஐ.பி.எல் தொடரில் கொண்டுவரப்பட்டுள்ள – புது ரூல்ஸ் இதோ

எனவே அவரது இடத்தில் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ராகுல் மீண்டும் இந்திய அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement