IPL 2023: இனிமே அம்பயர் பிரச்சனை பாதி குறையும். ஐ.பி.எல் தொடரில் கொண்டுவரப்பட்டுள்ள – புது ரூல்ஸ் இதோ

IPL 2022 (2)
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 31-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அகமதாபாத் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

CSK vs GT shami uthappa

- Advertisement -

இந்த ஐ.பி.எல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த டிசம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்திற்கு பின்னர் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற இருக்கும் இந்த ஐபிஎல் தொடருக்காக பல்வேறு விதிமுறைகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு புதிய விதிமுறை இந்த ஐபிஎல் தொடரில் கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி வழக்கமாகவே அம்பயர்கள் போட்டியின் முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை வழங்கும்போது அதில் சில தவறுகள் ஏற்படும். இப்படி தவறுதலாக கொடுக்கப்படும் முடிவுகளால் போட்டிகளின் முடிவில் கூட மாற்றம் ஏற்பட்டதை நாம் கண்டுள்ளோம்.

IPL Umpire Wide

இப்படி அம்பயர்கள் செய்யும் தவறை தவிர்ப்பதற்காக களத்தில் உள்ள அம்பயரின் முடிவை மாற்றி ரிவ்யூ செய்யும் வகையில் டி.ஆர்.எஸ் விதிமுறை கடந்த சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. இந்த டி.ஆர்.எஸ் விதிமுறையானது இதுவரை அம்பயர்கள் விக்கெட் வழங்கும்போது மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் தற்போது துவங்கி நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் விக்கட்டுக்காக மட்டுமல்லாமல் நடுவர்கள் வொயிடு மற்றும் நோபால் முடிவுகளை தவறாக அளித்தாலும் போட்டியின் கேப்டன்கள் அந்த முடிவினை எதிர்த்து ரிவ்யூ செய்யலாம் என்று அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் மகளிர் லீக் போட்டியில் வொயிடு மற்றும் நோ பால்களுக்கு ரிவியூ கேட்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய மற்றொரு – மும்பை இந்தியன்ஸ் வீரர்

இந்த விதிமுறை தற்போது அம்பயர்களின் தவறை சரி செய்யும் நோக்கத்தில் சரியான விதிமுறையாக பார்க்கப்படுவதால் தற்போது இந்த விதிமுறையை ஐபிஎல் தொடரிலும் கொண்டு வர ஐ.பி.எல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு இந்த புதிய விதிமுறையானது நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement