IPL 2023 : காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய மற்றொரு – மும்பை இந்தியன்ஸ் வீரர்

Mumbai Indians MI
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற இருக்கும் பதினாறாவது ஐபிஎல் தொடரானது இம்மாத இறுதியில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது அணி வீரர்களின் இடத்தினை தற்போது உறுதி செய்து வருகின்றனர். இதில் சில அணிகளைச் சேர்ந்த வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

MI Mumbai Indians

- Advertisement -

அந்த வகையில் கடந்த சீசனின் போது மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி கடைசி இடத்தை பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு மீண்டும் பலமாக கம்பேக் கொடுக்க காத்திருக்கிறது. ஆனால் அடுத்தடுத்து அந்த அணியை சேர்ந்த வீரர்கள் காயம் காரணமாக விலகி வருவது மும்பை அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ரா காயம் காரணமாக ஐ.பி.எல் தொடரில் விளையாட மாட்டார் என்ற ஒரு தகவல் பேசப்பட்டு வருகிறது. அதேபோன்று இங்கிலாந்து அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்து சிறப்பாக பந்துவீசி வந்தாலும் அவரது உடல் தகுதியை கருத்தில் கொண்டு அவருக்கு சுழற்சி முறையில் தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று மும்பை நிர்வாகம் கூறியுள்ளது.

richardson 1

அந்த அணியை சேர்ந்த மேலும் சில வீரர்களும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மும்பை அணியைச் சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜெய் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்தே வெளியேறி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த பிக் பேஷ் தொடரின் கடைசி சில போட்டிகளில் காயம் காரணமாக ஓய்வில் இருந்து ரிச்சர்ட்சன் மீண்டும் தற்போது உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். இந்நிலையில் உள்ளூர் போட்டியில் ஏற்பட்ட காயத்தினால் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் அவரது காயம் குணமடைய இன்னும் மாதங்கள் எடுக்கும் என்பதனால் அவர் ஐபிஎல் தொடரில் முற்றிலுமாக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா அணிக்கான டி20 கேப்டன் பதவியிலிருந்து பாவுமா நீக்கம் – புதிய கேப்டன் யார் தெரியுமா?

நடைபெற்று முடிந்த மினி ஏலத்தில் மும்பை அணி அவரை ஒன்றரை கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியிருந்த வேளையில் தற்போது அவரும் காயம் காரணமாக வெளியேறி உள்ளது மும்பை அணியின் பந்துவீச்சு துறையை பெரிய அளவில் பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement