தென்னாப்பிரிக்கா அணிக்கான டி20 கேப்டன் பதவியிலிருந்து பாவுமா நீக்கம் – புதிய கேப்டன் யார் தெரியுமா?

Bavuma
- Advertisement -

தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Bavuma

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டியானது மார்ச் 8-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என அடுத்தடுத்து தென் ஆப்பிரிக்கா அணி விளையாட இருக்கிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களுக்கான தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்த தெம்பா பவுமா இனி ஒருநாள் அணிக்கு மட்டும்தான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aiden Markram

அதோடு டி20 கிரிக்கெட் புதிய கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் எய்டன் மார்க்கம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அறிமுக தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா தேசிய அணிக்கான டி20 அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நடைபெற்று வரும் பல்வேறு தொடர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தையும், கேப்டன்சியையும் வெளிப்படுத்திய மார்க்ரம் எதிர்கால தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக பார்க்கப்படுவதால் இனி தொடர்ச்சியாக டி20 அணிக்கு அவரே கேப்டனாக இருப்பார் என்றும் அவரது தலைமையிலே டி20 உலக கோப்பையை தென்னாப்பிரிக்க அணி எதிர்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஜெயசூர்யா மற்றும் ஷாஹித் அப்ரிடிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இமாலய சாதனையை நிகழ்த்திய – சாகிப் அல் ஹசன்

அதே போன்று தற்போது கேப்டனாக இருந்து வந்த தெம்பா பவுமாவின் செயல்பாடு சற்று சுமாராக இருப்பதாலும் இந்த புதிய கேப்டன் அறிவிப்பு வெளியாகி உள்ளது என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement