இந்திய அணியில் இவரை தேர்வு செய்ததுக்கு பதில் ரிஷப் பண்டையே விளையாட வச்சிருக்கலாம் – பாண்டிங் ஆதங்கம்

Ponting
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதல் இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 244 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் இந்தியா அணி 53 ரன்கள் முன்னிலை பெற்றது.

Ind

- Advertisement -

இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் 2வது இன்னிங்சை போது இந்திய அணி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இரண்டாவது இன்னிங்ஸ் மொத்தமாக 128 பந்துகளை மட்டுமே சந்தித்த இந்திய அணி 36 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மேலும் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் ஆக இது பதிவாகியுள்ளது. அதுமட்டுமின்றி மோசமான தோல்வியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் செய்த தவறை பலரும் சுட்டிக் காட்டி தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஹா செய்த தவறை சுட்டிக்காட்டி உள்ளார். இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் இந்திய அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று தேர்வு செய்யப்பட்ட சஹா 15வது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் மார்னஸ் லாபுஷேன் கொடுத்த எளிதான கேட்சை தவறவிட்டார்.

Saha 1

அதுமட்டுமின்றி அவர் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் புஜாரா அந்த கேட்ச்சை எளிதாக பிடித்திருப்பார். ஆனால் சகாவின் குறுக்கீட்டால் அந்த கேட்சை புஜாராவும் தவறவிட்டார், இவரும் கோட்டைவிட்டார். இது குறித்து பாண்டிங் தெரிவித்த கருத்தில் : சஹா மிகவும் கவனக்குறைவாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் போது முழு கவனத்தையும் போட்டியின் மீது வைத்து விளையாட வேண்டும். அதுவும் குறிப்பாக விக்கெட் கீப்பர் என்பவர் ஒவ்வொரு பந்தையும் கவனமாக எதிர் கொண்டால் மட்டுமே கிடைக்கும் சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

Saha

இந்திய அணிகள் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இருந்தாலும் விராட் கோலி சகாவின் மீது அதிக நம்பிக்கை வைத்து அணிக்கு தேர்வு செய்தார். ஆனால் ரசிகர்கள் பலரும் சஹாவிற்கு பதிலாக பண்டையே அணியில் சேர்த்திருக்கலாம். எதற்கு இன்னும் வெளியிலேயே அமரவைத்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் ஏற்கனவே அவர் தான் தற்போதைய உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் தோனி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Advertisement